- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி விஜயை பின்னுக்கு தள்ளி முன்னேறிய நடிகர் கமல்ஹாசன், அரசியலை விட்டுட்டு இனி சினிமாவுக்கே முழுசா...

ரஜினி விஜயை பின்னுக்கு தள்ளி முன்னேறிய நடிகர் கமல்ஹாசன், அரசியலை விட்டுட்டு இனி சினிமாவுக்கே முழுசா வந்துடுங்க தலைவா… – புலம்பும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ரஜினி விஜய் எப்போதுமே வசூல் மன்னர்களாக ரசிகர்கள் மத்தியில் வலம் வருகின்றனர். அவர்கள் படங்கள் என்றாலே நிச்சயமாக தயாரிப்பாளர்களுக்கு பெரிய கணிசமான லாபத்தை தந்து விடுகிறது. அதுவும் 74 வயதிலும் ரஜினிக்கு கிடைத்து வரும் ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைக்கிறது.

நடிகர் விஜய் தனது சினிமா பயணத்தில் 32 ஆண்டுகளை கடந்திருக்கிறார். இதுவரை அவரது நடிப்பில் 68 படங்கள் வெளியான நிலையில் இப்போது தனது 69வது படம் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இதுதான் நடிகர் விஜயின் கடைசி படம் என்று ஏற்கனவே அவரே அறிவித்து விட்டார். அதனால் விஜயின் படங்கள் 69 என்ற எண்ணிக்கையுடன் முற்றுப்புள்ளியாகி விட்டது.

எனினும் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் இயக்கத்தின் தலைவராக அவர் அரசியலில் பெரிய வெற்றியை பெற்று, தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆனால் மட்டுமே சினிமாவை விட்டு விலகி இருப்பார். ஒருவேளை அரசியலில் அவருக்கு கமல் சரத்குமார் கே பாக்யராஜ் போன்றவர்களின் நிலையே ஏற்பட்டால் மீண்டும் சினிமாவுக்கு வந்துவிடுவார் என்றும் ஒரு தரப்பினர் கலாய்த்து வருகின்றனர்.

ஆனால் தமிழக அரசியல் களத்தில் இன்றைய சூழலை பொருத்த வரை மத்தியில் ஆளும் பாஜக மீதும் மாநிலத்தை ஆளும் திமுக மீதும் தமிழக மக்கள் கடுமையான விரக்தியில் ஏமாற்றத்தில்தான் இருந்து வருகின்றனர். கடந்த பார்லிமென்ட் தொகுதியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி ஜெயித்தது, திமுக மீதான மக்களின் ஆதரவு அல்ல, பாஜக மீதான வெறுப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் டிஜிட்டல் ரைட்ஸ் ரூ. 110 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கூலி படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கியுள்ளது. அதே போல் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ஜனநாயகன் படம் டிஜிட்டல் ரைட்ஸ் ரூ. 121 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகன் படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளம் வாங்கியுள்ளது.

நடிகர் ரஜினி நடித்த கூலி படத்தை விட நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் ரூ. 11 கோடி அதிகமாக ஓடிடி தளத்தில் விற்பனை செய்யப்பட்டது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஆனால் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் சிம்பு நடித்த தக்லைப் படம் 149.7 கோடி ரூபாய் டிஜிட்டல் ரைட்ஸ் விற்பனை நடந்துள்ளது. ரஜினி, விஜய் இருவரையும் பின்னுக்கு தள்ளி கமல் டிஜிட்டல் ரைட்ஸ் விலையில் முன்னேறி இருக்கிறார் என்பது கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

சற்று முன்