- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தை செய்யாதீர்கள் என்று என் மகள்களே என்னை எச்சரித்தார்கள் - பகிரங்கமாக ஸ்டேட்மென்ட் விடுத்த...

அந்த விஷயத்தை செய்யாதீர்கள் என்று என் மகள்களே என்னை எச்சரித்தார்கள் – பகிரங்கமாக ஸ்டேட்மென்ட் விடுத்த நடிகை குஷ்பு

- Advertisement -

நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை நடித்துக்கொண்டு இருப்பவர். 1988ம் ஆண்டில் வெளிவந்த தர்மத்தின் தலைவன் என்ற படத்தில் நடிகர் பிரபுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். இதில் நடிகர் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். படம் செம ஹிட் ஆனதால் குஷ்புவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தது.

வருஷம் 16, சின்னதம்பி, மன்னன், அண்ணாமலை போன்ற படங்களில் நடித்து 1990களில் மிக முக்கியமான முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தார். இயக்குநர் சுந்தர் சியை, திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இப்போது குஷ்பு, பாஜகவில் இருக்கிறார். தேசிய மகள் ஆணையத்தில் உறுப்பினராகவும் இருந்து பணிசெய்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகை குஷ்பு, சமீபத்தில் வெளியாகி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிற அனிமல் படம் குறித்து விமர்சித்து பேசினார். குஷ்பு பேசியதாவது, அனிமல் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் குறித்த பல விஷயங்களை நேரில் கேட்டிருக்கிறேன்.

அனிமல் போன்ற பெண் வெறுப்பு சினிமா படம், பாக்ஸ் ஆபிஸில் பெரிய ஹிட் படமாக வசூல் குவிகிறது என்றால், அந்த இடத்துக்கு அனிமல் படத்தை கொண்டு சென்ற மக்களின் மனநிலையை சிந்தித்து பார்க்க வேண்டும், ஆனால் இதில் இயக்குநரை இதில் குறை சொல்ல முடியாது. ஏனெனில் அவர்களுக்கு எப்போதுமே வெற்றிதான் முக்கியம். சமூகத்தில் என்ன நடக்கிறதோ அதை தான் காட்டுகிறோம் என்று கூறி விடுகின்றனர்.

- Advertisement -

என் மகள்கள் அனிமல் போன்ற படங்களை பார்க்க நான் விரும்பவில்லை. ஆனால் அந்த படம் எதைப்பற்றி பேசுகிறது என்பதை தெரிந்துக்கொாள்ளும் ஆர்வத்தில் அந்த படத்தை, என் மகள்கள் பார்த்திருக்கின்றனர். அவர்கள் அந்த படத்தை பார்த்துவிட்டு வந்து என்னிடம் வந்து சொன்ன வார்த்தை, தயவு செய்து நீங்கள் அந்த படத்தை பார்த்து விடாதீர்கள் என்று எச்சரித்தார்கள் என்பதுதான்.

இப்படிப்பட்ட படங்களுக்கு எப்படி ரீப்பிட் ஆடியன்ஸ் வருகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. அப்படி மீண்டும் மீண்டும் வந்து பார்க்கிறார்கள் என்றால், நாம் எங்கு சென்றுக்கொண்டு இருக்கிறோம் என்பதும் புரிகிறது என்று, ஆவேசமாக பேசியிருக்கிறார் குஷ்பு. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்