நடிகர் அஜீத்குமார் நடிகர் விஜய் இருவருமே சினிமாவில் போட்டியாளர்களாக கருதப்படுகின்றனர். இது காலம் காலமாக முன்னணி நடிகர்களின் ரசிகர்களுக்குள் நிலவிவரும் ஒரு போட்டி மனப்பான்மைதான். இதை சினிமாவில் தவிர்க்க முடியாதது. அன்று எம்ஜிஆர் சிவாஜி, பிறகு ரஜினி கமல் இப்போது விஜய் அஜீத் என ரசிகர்கள் இரண்டாக பிளவுபட்டு நிற்கின்றனர்.
இப்போது நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகி விட்டார். ஜனநாயகன் படத்தை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார். வருகிற மே 15ம் தேதியுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைய உளளது. அதன்பிறகு தமிழ்நாடு முழுவதும் விஜய் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே இப்போது நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் ரிலீஸாகி 4 நாட்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த சூழலில் ஒரு தியேட்டரில் குட் பேட் அக்லி படம் பார்க்க விஜய் ரசிகர்கள் சிலர், டிவிகே டிவிகே என கத்திக்கொண்டே இருந்திருக்கின்றனர்.
ஒரு கட்டம் வரை பொருத்துப் பார்த்த மற்ற ரசிகர்கள், அங்கு டிவிகே டிவிகே என கத்தியவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்து தியேட்டரை விட்டு வெளியேற்றி உள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஜீத்குமார் ரசிகர்களை வெறுப்பேற்றும் விதமாக விஜய் ரசிகர்கள் இப்படி நடந்துக்கொண்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் வெளியிட்ட பதிவில், குட் பேட் அக்லி படம் ஓடிய தியேட்டரில் டிவிகே டிவிகே என கத்திய விஜய் ரசிகர்களுக்கு தர்ம அடி கிடைத்துள்ளது. சமீபகாலமாக இப்படி பொது இடங்களில் கத்தி வருகின்றனர். இனி அடிக்கடி தர்ம அடி வாங்கப்போவது உறுதி என்று அதில் கூறியிருக்கிறார்.
விஜய் நடித்த படங்களுக்கு செல்லும் அஜீத்குமார் ரசிகர்கள், கடவுளே அஜீத்தே என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி சம்பவங்களும் சமீபத்தில் நடந்திருக்கின்றன. அதனால் இப்படி பொது இடங்களில், அஜீத்குமார் நடித்த படங்களுக்கு செல்லும் இடங்களில் டிவிகே டிவிகே என கூச்சலிடுவதை விஜய் ரசிகர்கள் தவிர்ப்பதே மிகவும் நல்லது. இதுகுறித்து விஜயும் தன் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.





