- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் அரசியலுக்கு வருவார் என அப்போதே கேப்டனுக்கு தெரியுமா? இப்படி ஒரு அட்வைஸ் சொல்லிருக்காரே? -...

விஜய் அரசியலுக்கு வருவார் என அப்போதே கேப்டனுக்கு தெரியுமா? இப்படி ஒரு அட்வைஸ் சொல்லிருக்காரே? – நடந்ததை அப்படியே சொன்ன நடிகர் விஜய்!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். ஒரு படத்தில் நடிக்க ரூ. 250 கோடி வரை சம்பளம் வாங்கும் ஒரே தமிழ் நடிகர் அவர்தான். ரஜினி கமல் அஜீத்குமார் எல்லாம் இன்னும் ரூ. 200 கோடியை கூட தொடவில்லை. ஆனால் இப்போது நடித்து வரும் ஜனநாயகன் படத்துடன் விஜய் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு அரசியலில் முழு கவனம் செலுத்த இருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள நடிகர் விஜய், வருகிற 2026ம் ஆண்டில் நடக்க உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் முதல்வர் பதவிக்கு குறிவைத்து இருக்கிறார். இதற்காக திமுகவை அரசியல் எதிரி என்றும் பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறி வருகிறார். இப்போதைக்கு விஜயுடன் எந்த கட்சி கூட்டணி சேரும் என்று தெளிவாக தெரியவில்லை.

ஏனெனில் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் நிலையில் பாஜகவுடன் அதிமுக இணைந்திருக்கிறது. பிரதான கட்சிகளை தவிர்த்து உதிரி கட்சிகள் எல்லாமே திமுக அல்லது அதிமுக கூட்டணிகளுக்குதான் வழக்கமாக செல்கின்றன. அதனால் தமிழக வெற்றிக் கழகம் தனித்தே வருகிற சட்டசபை தேர்தலை சந்திக்க அதிக வாய்ப்புள்ளது.

நடிகர் விஜய் நடிக்க வந்த ஆரம்பத்தில் நடிகர் விஜயகாந்துடன் இணைந்து செந்தூரப்பாண்டி என்ற படத்தில் நடித்திருந்தார். இதில் விஜயகாந்துக்கு தம்பியாக அவர் நடித்திருப்பார். விஜயின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர்தான் இந்த படத்தை டைரக்ட் செய்தார். விஜய்க்கு தமிழ் சினிமாவில் பெரிய கவனம் கிடைக்காத நிலையில் விஜயகாந்துடன் தன் மகனை நடிக்க வைத்தார் எஸ்ஏசி என்பது குறிப்பிடத்தக்கது.

செந்தூரப்பாண்டி படத்தில் நடித்தது குறித்து வளரும் நடிகராக அப்போது இருந்த நடிகர் விஜய் ஒரு நேர்காணலில் கூறியதாவது, செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் சாருடன் சேர்ந்து நடித்தேன். அவருக்கு தம்பியாக நடித்தேன். அந்த படத்தில் விஜயகாந்த் உடன் நடித்த போது ரொம்பவும் டென்சனாக இருந்தது. எல்லோரும் சொல்வாங்க, இவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட்டோட நடிக்கறே, ரொம்பவும் ஜாக்கிரதையா நடிக்கணும் என்று.

ஆனா அவர் என்கிட்ட ரொம்பவும் கேஷூவலா ஜோவியலா பழகினார். குறிப்பாக அவரே பெரிய ஆக்சன் ஹீரோ தான். ஆனால் இந்த சண்டை காட்சிகள் எல்லாம் எடுக்கும்போது என்கிட்ட, ரொம்ப ரிஸ்க் எடுக்காதே, இப்படி பண்ணனும் அப்படி பண்ணனும் என்று ரொம்ப அட்வைஸ் பண்ணினார் என்று விஜய் கூறியிருக்கிறார். விஜயகாந்த் ஆக்சனுக்கு அட்வைஸ் ஆக சொன்னது, இப்போது விஜயின் அரசியல் வருகைக்கும் பொருந்திவிட்டது. அப்போதே கேப்டனுக்கு தெரிந்துவிட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சற்று முன்