- Advertisement -
Homeபொழுதுபோக்குசுந்தர் சி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படம், கதாநாயகி யார் தெரியுமா? - புது...

சுந்தர் சி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படம், கதாநாயகி யார் தெரியுமா? – புது காம்போ வேற லெவல்ல தெறிக்க விடுதே…

- Advertisement -

சினிமா தியேட்டர்களுக்கு பலதரப்பட்ட மக்கள் பலவிதமான மனநிலையில் படம் பார்க்க வருகின்றனர். அவர்களை பொருத்த வரை திரையில் ஓடும் படம் அவர்களை ஒருவிதத்தில் ரிலாக்ஸ் செய்ய வேண்டும். குறிப்பாக சிரிக்க வைக்க வேண்டும். கூடுமானவரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். அப்படி ஒரு படமாக திரையில் ஓடினால் ஓரளவாவது அவர்களது இரண்டரை மணி நேரம் ஜாலியாக கழியும்.

அந்த வகையில் முதலில் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாகவே படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் சுந்தர் சி. இவரது படங்களில் காதல் காமெடி கவர்ச்சி குடும்ப சென்டிமென்ட் என்பது பரவலாக இருக்கும். அதனால் நண்பர்களாக குடும்பமாக தனியாக என தியேட்டர்களுக்கு வருவோர் நிச்சயமாக ஒரு வித நல்ல சந்தோஷத்தை இவரது படங்கள் தந்து விடுகின்றன.

- Advertisement -

சுந்தர் சி இயக்கிய படம் என்றால் நிச்சயமாக இரண்டரை மணி நேரத்தை ஜாலியாக கழிக்கலாம் என்று தியேட்டருக்கு வரும் ரசிகர்களை ஏமாற்றாமல் அதற்கேற்ப படங்களை சுந்தர் சி தந்து வருகிறார். அந்த வகையில் கியாரண்டியான ஒரு வெற்றிக்கரமான இயக்குனராக, சுந்தர் சி இருந்து வருகிறார்.

கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படம் கடந்தாண்டில் வெளியாகி ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இதன் பிறகு இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான சுந்தர் சி இயக்கிய மதகஜ ராஜா படமும் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. அதுவும் 12 ஆண்டுகளுக்கு முன் உருவான படம் மதகஜ ராஜா என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்போது இயக்குனர் சுந்தர் சி, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். நாயகனாக சுந்தர் சி நடிக்கிறார். இந்த படம் ரூ. 120 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது.

இதற்கிடையே இயக்குனர் சுந்தா் சி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது. இதுகுறித்து சுந்தர் சி கார்த்தி இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிற டிசம்பர் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இந்த படம் உருவாகிறது. பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்