- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி, விஜய்க்கு மேல ஒருத்தர் இருக்காரு. அவரும் அதை பார்த்துகிட்டே தான் இருக்காரு - ரோபோ...

ரஜினி, விஜய்க்கு மேல ஒருத்தர் இருக்காரு. அவரும் அதை பார்த்துகிட்டே தான் இருக்காரு – ரோபோ சங்கர் அளித்த பதில்

- Advertisement -

தமிழ் திரையுலகில் சமீபகாலமாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டி அதிக அளவில் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் படங்கள் மிகவும் தாமதமாக வெளியாவதால் அவருக்கு அடுத்து யார் சூப்பர் ஸ்டார்? என்கிற மோதல் வெடித்துள்ளது. ஏற்கனவே இளைய தளபதி விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கொடுக்கப்பட்ட வேளையில் சூப்பர் ஸ்டார் பட்டம் தனக்கு தேவையில்லை என்று விஜய் பேசியிருந்தார்.

Rajini-and-Vijay

ஆனாலும் ரஜினிக்கு அடுத்து விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு அவ்வப்போது வெளியாகி அனைவரது மத்தியில் விவாதத்தை எழுப்பி வருகிறது. அதே வேளையில் தற்போது ஜெயிலர் படம் முற்றிலுமாக தயாராகி இருக்கும் நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கான மோதலும் ரஜினி மற்றும் விஜய் ஆகியோரது மதத்திலும் முற்றியுள்ளது போன்ற பிம்பமும் உருவாகியுள்ளது.

இந்நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு? என்பது பற்றி காமெடி நடிகர் ரோபோ சங்கரிடம் தனியார் பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரோபோ சங்கர் கூறுகையில் : தலைவர்னா சூப்பர் ஸ்டார் தான், தளபதினா அது விஜய் தான், அது இரண்டையும் யாராலும் மாற்ற முடியாது. இதன்பிறகு வரும் நடிகர்கள் வரும்போது அந்த இடம் காலியாக இருக்கும். அந்த இடமானது அவர்களுக்கு போகலாம். ஆனால் தற்போதைய தலைமுறைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அதேபோன்று சூப்பர் ஸ்டாருக்கு அப்புறம் தளபதி தான். விஜய் எல்லோருக்கும் பிடித்த நடிகர். ஆனால் இவர்களுக்கெல்லாம் மேலே ஒருவர் இருக்கிறார்.

Robo-and-Kamal

அவர்தான் எங்களுடைய ஆண்டவர் உலக நாயகன். மேலே இருந்து அவர் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டிருப்பார் என கமலஹாசன் குறித்து ரோபோ சங்கர் குறிப்பிட்டிருந்தார். இதே கேள்வியை இயக்குனர் சேரனிடம் கேட்டதற்கு : நான் யாருங்க சொல்வதற்கு அவங்க இரண்டு பேரும் தான் சொல்லணும். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? நான் அவர்கள் இரண்டு பேரையும் வைத்து இதுவரை படம் பண்ணியதே கிடையாது. நான் அவர்கள் இருவரின் ரசிகன். எனக்கு என் பிழைப்பு முக்கியம். யாரு சூப்பர் ஸ்டார்? என்பது எனக்கு முக்கியமில்லை என்று சேரன் சூசகமாக சமாளித்தார்.

ஆனால் தற்போதைய வேளையில் சூப்பர் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்கிற மோதல் இருந்து வந்தாலும் இன்றளவும் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிக்கு மிகை யாரும் இல்லை என்பதே ரசிகர்களின் குரலாகவும் ஒலித்து வருகிறது. ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொரு பெயருடன் திரைக்கு வந்தாலும் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்கிற பட்டம் நிரந்தரமாக யாருக்கும் செல்லாமல் ரஜினிகாந்துக்கு மட்டுமே செல்லும் என்று அவரது ரசிகர்கள் புகழ் பாடி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் ஜெயிலர் தற்போது அனைவரது மத்தியிலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்