கங்குவா படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஜெயராம் நாசர் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன.
மேலும் கடந்த 18ம் தேதி சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா, வாழ்க்கை அழகானது. கிடைக்கிற வாய்ப்புகளை நழுவ விட்டு விடாதீர்கள் என்று தனது ரசிகர்கள் மத்தியில் பேசினார்.
கடந்த பல ஆண்டுகளாக நடிகர் சூர்யாவுக்கு பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும்படியாக வெற்றிப் படங்கள் இல்லாமல் போனது பெரிய துரதிஷ்டம்தான். அவர் நடித்த ஜெய்பீம் சூரரைப் போற்று படங்களை தவிர மற்ற படங்கள் எதுவுமே கடந்த 10 ஆண்டுகளில் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்காமல் ஏமாற்றி விட்டது.
அதனால் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள இந்த ரெட்ரோ படத்தை நடிகர் சூர்யா மற்றும் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருமே இந்த படம் நிச்சயமாக பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கின்றனர். படத்தின் டிரெய்லரும் ஓரளவுக்கு ரசிகர்களுக்கு திருப்தியை தந்திருக்கிறது.
இந்நிலையில் ரெட்ரோ படம் குறித்த ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை தந்திருக்கிறது. அதாவது இந்த படத்தில் இலங்கை தமிழர்கள் குறித்து நெகட்டிவ் ஆன கருத்துகளை சொல்லும் காட்சிகள் வருவதாக கூறப்படுகிறது. அதனால் வெளிநாடுகளில் இந்த படத்துக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏற்கனவே தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய போது, இலங்கை தமிழர்களை ரவுடிகளை போல அவர் சித்தரித்து காட்டியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ரெட்ரோ கேங்ஸ்டர் படம் இல்லை என்று அவர் கூறினாலும் படத்தில் இலங்கை தமிழர்கள் குறித்து வில்லங்கமான காட்சிகளை அவர் வைத்திருந்தால் அது படத்துக்கு பெரிய விவகாரமா மாறிடுமே என்றுதான் சூர்யா ரசிகர்கள் புலம்புகின்றனர்.





