- Advertisement -
Homeபொழுதுபோக்குலோகார்னோ திரைப்பட விழாவில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - உற்சாகத்தில் ஜாக்கிசான்...

லோகார்னோ திரைப்பட விழாவில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது – உற்சாகத்தில் ஜாக்கிசான் ரசிகர்கள்!

- Advertisement -

1980,1990களில் சினிமாவை ரசித்த ரசிகர்களால் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானை தவிர்த்திருக்க முடியாது. ஒருமுறை அவரது படங்களை எதேச்சையாக பார்த்தவர்கள் கூட அவரது படங்களை அடுத்தடுத்து பார்க்க துவங்கி விடுவர். மிக விரைவிலேயே அவருக்கு தீவிர ரசிகர்களாகவும் மாறிவிடுவர்.

அவரது அதிரடி சண்டை காட்சிகளில் மனதை பறி கொடுக்காத சினிமா ரசிகர் யாருமே இருக்க முடியாது. பல ஆபத்தான காட்சிகளில் டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடித்து பலமுறை படப்பிடிப்பு தளங்களில் பலத்த காயமடைந்தவர், பலமுறை உயிருக்கு போராடி மீண்டு வந்தவர்தான் ஜாக்கிசான். அவரது படங்களில் ஆக்சன் காட்சிகளை போலவே காமெடி காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடும்.

கூ ஏம் ஐ, தி லெஜண்ட் ஆப் டிரங்கன் மாஸ்டர், போலீஸ் ஸ்டோரி, கராத்தே கிட் என ஜாக்கிசான் நடித்த பல படங்கள் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டவை. ரஷ் ஹவர் பிளிடீங் ஸ்டீல், சிட்டி ஹண்டர், நியூ போலீஸ் ஸ்டோரி, ஹிட்டன் ஸ்ட்ரைக் ரஷ் ஹவர் 2 ரஷ் ஹவர் 3 என அவரது பல படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட வெற்றி படங்களாகும்.

நடிகர் ஜாக்கிசான் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டில் வெளியான படம் கராத்தே கிட் இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 359 மில்லியன் டாலர் வசூலை எட்டியது. இந்த படத்தின் 2ம் பாகமாக கராத்தே கிட் லெஜன்ட் என்ற படத்தில் ஜாக்கிசான் நடித்துள்ளார். இந்த படம் வருகிற மே மாதம் 30ம் தேதி வெளியாகிறது.

ஜாக்கிசான் கடைசியாக கடந்த 2023ம் ஆண்டில் ரைட் ஆன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஜப்பானில் அதிக வசூல் செய்த சீன திரைப்படமாகவும் 2023ம் ஆண்டில் மலேசியாவில் அதிக வசூல் செய்த சீனப் படங்களில் டாப் 3 இடத்தையும் பிடித்துள்ளது. இப்போது மீண்டும் ரைட் ஆன் படத்தை இயக்கிய லாரி யாங் இயக்கத்தில் தி ஷேடோஸ் எட்ஜ் என்ற படத்தில் ஜாக்கிசான் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இப்போது 71 வயதை கடந்த நிலையில் இளமை துடிப்புடன் படங்களில் நடித்து வரும் ஹாங்காங்கை சேர்ந்த நடிகர் ஜாக்கிசானுக்கு சுவிட்சர்லாந்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ள 78வது லோகார்னோ திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட் 9ம் தேதி இந்த விருதை நடிகர் ஜாக்கிசான் பெற்றுக் கொள்கிறார். கடந்த 1960களில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அடியெடுத்து வைத்த ஜாக்கிசானுக்கு சர்வதேச அளவில் புகழ்பெற்ற லோகார்னோ திரைப்பட விழா அரங்கில் இந்த விருது வழங்கப்படுவது அவரது ரசிகர்களுக்கு சந்தோஷமான பெருமையை தந்துள்ளது.

சற்று முன்