- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த ரெண்டு விஷயங்களும் எனக்கு பிடிக்காது, அதை செய்ய மாட்டேன் - பத்மபூஷன் விருது பெற்ற...

அந்த ரெண்டு விஷயங்களும் எனக்கு பிடிக்காது, அதை செய்ய மாட்டேன் – பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜீத்குமார் ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதையடுத்து அவர் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அடுத்த படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் முதல் வெளிநாடுகளில் நடந்து வரும் கார் பந்தயங்களில் கலந்துக்கொண்டுள்ள நடிகர் அஜீத்குமார் தொடர்ந்து வெற்றிகளை பெற்று வருகிறார். 2 தினங்களுக்கு முன் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பத்மபூஷன் விருது வழங்கினார். இந்த விருது பெற்றது பெரிய சந்தோஷம் தருவதாக நடிகர் அஜீத்குமார் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து நடிகர் அஜீத்குமார் கூறியிருப்பதாவது, நான் ஏதோ கனவில் இருப்பது போலவே உணர்கிறேன். மனதளவில் நான் சாதாரணமானவன் என்பதில் தெளிவாகவே இருக்கிறேன். எனவே இந்த உணர்ச்சியை அனுபவிப்பது மிகவும் யதார்த்தமாக இருக்கிறது.

நான் மகிழ்ச்சியாகவும் அதே வேளையில் பத்மபூஷன் விருதுக்கு மிகவும் நன்றி கடன் பட்டவனாகவும் இருக்கிறேன். நான் சரியான பாதையில் இருப்பதாகவே உணர்கிறேன். அதனால் நான் என் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். என் பெயருக்கு முன்னால் அடைமொழி குறிப்பிடுவதை நான் விரும்புவது இல்லை. அதை நம்புவதும் இல்லை.

- Advertisement -

என்னை அஜீத் என்றோ அஜீத்குமார் என்றோ ஏ கே என்றோ அழைப்பதையே விரும்புகிறேன். நான் ஒரு நடிகன். என் வேலைக்கு சம்பளம் வாங்குகிறேன். புகழும் செல்வமும் நாம் செய்யும் வேலை நமக்குத் தரும் பரிசு. அந்த வகையில் என் வேலையை ரசித்து செய்கிறேன். கடந்த 33 ஆண்டுகளாக மகிழ்ச்சியுடன் நடித்து வருகிறேன். என் வாழ்க்கையை முடிந்தவரை எளிமையாக வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறேன்.

அளவுக்கு அதிகமாக யோசிப்பதை தவிர்க்கிறேன். ஒரே நேரத்தில் அதிக படங்கள் நடிக்க மாட்டேன். நடிப்பு தாண்டி என் இதர பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வமான விஷயங்களில் நேரத்தை செலுத்தி வருகிறேன் என்று நடிகர் அஜீத்குமார் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். அதிகமாக யோசிப்பது, அதிக படங்களில் நடிப்பது ரெண்டுமே தனக்கு பிடிக்காது என்றும் அவர் இதில் தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்