- Advertisement -
Homeபொழுதுபோக்குசன் பிக்சர்ஸ் போட்ட அந்த கண்டிஷன், அதுக்கு வேற ஆளை பாருங்க என உடனடியாக நோ...

சன் பிக்சர்ஸ் போட்ட அந்த கண்டிஷன், அதுக்கு வேற ஆளை பாருங்க என உடனடியாக நோ சொன்ன அஜீத்குமார் – அப்போ அந்த கமிட்மென்ட் இல்லையா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் பாதியில் நின்றுவிட்டது. அதைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கி, 2 நாட்கள் நடந்துள்ளது. ஆந்திராவில் தேர்தல் நேரமாக இருப்பதால், பிறகு ஷூட்டிங் தொடரும் என்று கூறப்படுகிறது. அதனால் சில தினங்களில் மீண்டும் அஜீத்குமார் படப்பிடிப்பில் பிஸி ஆகி விடுவார்.

இதற்கிடையே சிறுத்தை சிவா, அஜீத்குமார் இணையும் அடுத்த படம் குறித்த பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஏற்கனவே கங்குவா படப்பிடிப்பில் இருந்த சிறுத்தை சிவாவிடம் இதுகுறித்து அஜீத்குமார் பேசிவிட்டார். அதனால் வீரம், விஸ்வாசம், விவேகம் படங்களை தொடர்ந்து மீண்டும் அஜீத் – சிறுத்தை சிவா கூட்டணியில் புதிய படம் உருவாகிறது.

- Advertisement -

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்து, அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளது. அப்போது வழக்கம் போல, ஹீரோக்களின் சம்பளத்தை குறைக்க சொல்லும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், அஜீத்குமாரின் சம்பளத்தை குறைக்க சொல்லி இருக்கிறது. இதற்கு அஜீத்குமார் உடன்படவில்லை.

அதே போல் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என்றால், அந்த படத்தின் பிரமோசன்கள் கண்டிப்பாக, பிரமாண்டமாக இருக்கும். அந்த வகையில், அஜீத்குமார் நடிக்கும் புதிய படத்துக்காக, அவர் 2 மணி நேரம் சன் டிவியில் பிரத்யேக பேட்டி ஒன்று தர வேண்டும் என்று ஆரம்பத்திலேயே கூறி ஒப்புதல் கேட்டுள்ளனர். கடந்த பல ஆண்டுகளாகவே இதுபோன்ற பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காத அஜீத்குமார், நிச்சயம் இது முடியாது என மறுத்து விட்டார். இது சன் பிக்சர்ஸ்க்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

- Advertisement -

இப்போதுதான் அஜீத்குமார், தனது சம்பளத்தை 200 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளார். அதை குறைக்க சன் பிக்சர்ஸ் முடிவு செய்வதை அஜீத்குமார் ஏற்கவில்லை. அதே போல் அஜீத்குமார், 2 மணி நேர ஸ்பெஷல் இன்டர்வியூ தர மறுப்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் ஏற்க முடியவி்லலை. எனவே இந்த 2 விஷயங்களில் உடன்பாடு ஏற்படாததால் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க விருப்பமில்லை என்று விலகி விட்டது.

இதையடுத்து சிறுத்தை சிவா, அஜீத்குமார் இணையும் அடுத்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் குறித்து பேச்சு வார்த்தை வேகமாக நடந்து வருகிறது. இதில் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களும் அடிபடுகின்றன. ஏற்கனவே லைகா புரடக்சன்ஸ் தந்த கசப்பான அனுபவத்தால் விடாமுயற்சியில் பாதியில் நிற்கிறது. எனவே. இந்த விஷயத்தில் அஜீத்குமார் அதிக கவனத்துடன் தயாரிப்பு நிறுவனங்களை தேர்வு செய்ய முனைப்பு காட்டுவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்