- Advertisement -
Homeபொழுதுபோக்குசந்தானத்துக்குலாம் வாய்ப்பு கொடுக்காத- சிம்புவிடம் சண்டை போட்ட கவுண்டமணி, ஆனால் அங்கதான் ஒரு டிவிஸ்ட்

சந்தானத்துக்குலாம் வாய்ப்பு கொடுக்காத- சிம்புவிடம் சண்டை போட்ட கவுண்டமணி, ஆனால் அங்கதான் ஒரு டிவிஸ்ட்

- Advertisement -

சந்தானம் விஜய் தொலைக்காட்சியின் “லொள்ளு சபா” நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலமானவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். “லொள்ளு சபா” நிகழ்ச்சியில் பல திரைப்படங்களை Spoof செய்ததால் அக்குழுவினருக்கு பல மிரட்டல்கள் வந்தன. எனினும் மக்கள் ஆதரவு அதிகமாக இருந்ததால் அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பல திரைப்படங்கள் Spoof செய்யப்பட்டன.

விஜய், விஜயகாந்த் போன்ற பல நடிகர்கள் “லொள்ளு சபா” குழுவினரை மிரட்டிய சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன. எனினும் ஒரு பக்கம், அஜித், விஷால், விக்ரம் ஆகிய நடிகர்கள் “லொள்ளு சபா” குழுவினரை பாராட்டிய சம்பவங்களும் நடந்தது உண்டு.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட “லொள்ளு சபா” சுவாமிநாதன், கவுண்டமணி சிம்புவிடம் சண்டை போட்டது குறித்தான ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

சிம்புவின் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “மன்மதன்”. இத்திரைப்படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடித்திருந்தார். இதில் கவுண்டமணி ஒரு முக்கிய காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல் சந்தானமும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் “மன்மதன்” திரைப்படத்தில் சந்தானத்தை நடிக்க வைக்க வேண்டும் என்று சிம்பு கூறியபோது, கவுண்டமணி, “அவன் எல்லா படத்தையும் கிண்டல் அடிச்சிட்டு இருக்கான். அவனுக்குப் போய் சான்ஸ் கொடுக்குறேன்னு சொல்லிட்டு இருக்க” என்று கூறினாராம். ஆனால் சிம்புவோ வேண்டுமென்றே கவுண்டமணியின் காட்சிகள் எல்லாவற்றையும் குறைத்துவிட்டு சந்தானம் இடம்பெற்ற காட்சிகளை அதிகமாக வைத்தாராம். “இவனெல்லாம் உருப்படவே மாட்டான்” என கவுண்டமணி திட்டினாராம். இவ்வாறு கவுண்டமணி திட்டிய சம்பவத்தை சுவாமிநாதன் அந்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

- Advertisement -

சற்று முன்