நடிகர் சூர்யா நடிப்பில் உருவான படம் ரெட்ரோ. இந்த படம் கடந்த 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று வெளியானது. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருந்தார். மேலும் ஜெயராம் நாசர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். 2டி நிறுவனம், ஸ்டோன் பென்ச் நிறுவனம் இந்த படத்தை இணைந்து தயாரித்திருந்தது.
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஏற்கனவே பல வெற்றிப் படங்களை தந்திருக்கிறார். குறிப்பாக அவரது இயக்கத்தில் வெளியான பீட்சா ஜிகர்தண்டா இறைவி பேட்ட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்கள் அவருக்கு பெரிய வெற்றியை தந்தன. அதிலும் குறிப்பாக பேட்ட படம் மாஸ் ஹிட் படமாக இருந்தது.
நடிகர் சூர்யாவுக்கு கடந்த பல ஆண்டுகளாகவே சொல்லிக் கொள்ளும்படியான பெரிய வெற்றிப் படங்கள் எதுவும் இல்லை. கடந்த 2013ம் ஆண்டில் வெளியான சிங்கம் 2 படத்துக்கு பிறகு 11 ஆண்டுகளில் அவர் 13 படங்களில் நடித்தார். அதில் ஜெய்பீம் சூரரைப் போற்று படங்கள் மட்டுமே நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகி வணிக ரீதியான வெற்றியை பெற்றன. மற்ற படங்கள் எல்லாமே தியேட்டர்களில் வெளியாகி தோல்வியை சந்தித்தன.
இந்த சூழலில் சூர்யாவின் 44வது படம் ரெட்ரோ பெரிய வரவேற்பை வெற்றியை குவிக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அந்த படம் வழக்கமாக ஒரு சராசரி படமாக இருந்துவிட்டது. பெரிய அளவில் ஒரு சுவாரசியமான கதைக்களத்தில் இந்த படம் இல்லை. தவிர கங்குவா படத்தை விட இந்த படம் மோசமாக இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
எனினும் கடந்த 5 நாட்களில் இந்த படம் மொத்தம் 83 கோடி ரூபாய் என்ற அபார வசூலை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில தினங்களில் ரெட்ரோ படம் ரூ. 100 கோடி வசூலை தொட்டு விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ரெட்ரோ படத்தை பார்த்துள்ளார். படம் குறித்து விமர்சனமும் செய்துள்ளார்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறுகையில், தலைவர் ரஜினிகாந்த் மெட்ரோ படத்தை பார்த்தார். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. என்ன ஒரு அற்புதமான முயற்சி. சூர்யாவின் நடிப்பு சூப்பர். கடைசி 40 நிமிடங்கள் அருமையாக இருந்தது. காமெடி காட்சிகள் அற்புதமாக இருந்தது. காட் பிளஸ் எனக் கூறினார். இதை கேட்டதும் நான் காற்றின் பறக்கிறேன் என்று கார்த்திக் சுப்பராஜ் தனது பதிவில் கூறியிருக்கிறார்.





