- Advertisement -
Homeபொழுதுபோக்குசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகும் புதிய படம் - தனுஷ்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகும் புதிய படம் – தனுஷ் பட இயக்குனர்தான் இயக்குகிறாரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த அவர் கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்தவர். கல்லூரியில் படிக்கும் போது குறும்படங்கள் பல இயக்கியவர். அப்போது அவரது கல்லூரிக்குச் சென்ற இயக்குனர் சுப்பராஜ், அவரது படங்களை பாராட்டி ஊக்கம் தந்திருக்கிறார்.

அதன்பிறகு சென்னையில் வங்கி ஊழியராக சில ஆண்டுகள் பணிபுரிந்த லோகேஷ் கனகராஜ் யாரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் இயக்குனராக பயிற்சி பெறாமல் குறும்படங்களை இயக்கிய அனுபவத்தில் அவரே நேரடியாக களத்தில் இறங்கி இயக்கிய படம்தான் மாநகரம்.

- Advertisement -

திரில் ஆக்சன் படமான மாநகரம் படம் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்ற நிலையில் அடுத்ததாக அவர் இயக்கிய கார்த்தி நடித்த கைதி படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. தொடர்ந்து விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கினார். இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்தார். அடுத்ததாக கமல் நடிப்பில் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இதிலும் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

தொடர்ந்து மாஸ் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடித்த படம் லியோ. வசூல் ரீதியாக பெரிய வரவேற்பை பெற்ற இந்த படம் விமர்சன ரீதியாக படுதோல்வியை சந்தித்தது. இப்போது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை இயக்கிய முடித்த லோகேஷ் கனகராஜ் அடுத்து கைதி 2 படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

- Advertisement -

இந்த சூழலில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை நட்சத்திர இயக்குனர் ஒருவர் இயக்குவதாகவும் லோகேஷ் கனகராஜ் நாயகனாக மட்டுமே நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை. இப்போது இந்த படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் என தகவல் வெளியாகி உள்ளது.

சாணிக்காயிதம் கேப்டன் மில்லர் போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்து இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கப் போவதாக இருந்தது. தனுஷ் நடிக்கும் இந்த படம் 2 பாகங்களாக உருவாகிறது. ஆனால் இளையராஜா படம் ஷூட்டிங் தள்ளிப் போனதால், இப்போது லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகி நடிக்கும் இந்த புதிய படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குவது உறுதியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்