கடந்த சில மாதங்களுக்கு முன்பே கூலி படப்பிடிப்பை முடித்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். சென்னையை தொடர்ந்து கேரளம் மாநிலம் பாலக்காடு அட்டப்பாடி பகுதியில் கடந்த மாதத்தில் 20 நாட்களுக்கு மேல் ஷூட்டிங் நடந்தது. இதில் ரஜினிகாந்த் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.
இப்போது மீண்டும் கேரளம் மாநிலம் கோழிக்கோடு பகுதியில் ஜெயிலர் 2 படத்தின் அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. அங்கு மொத்தம் 20 நாட்கள் படப்பிடிப்பை நடத்த இயக்குனர் நெல்சன் திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து கேரளாவில் ஷூட்டிங் நடத்தப்படுவதால், ஜெயிலர் 2 படத்தின் பிரதான கதைக்களமே கேரளாவோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஜெயிலர் 2 படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்டோர் நடிப்பது ஏற்கனவே உறுதியாகி விட்டது. இதில் நந்தமூரி பாலகிருஷ்ணா 20 நாட்கள் நடிக்கிறார். அவருக்கு போலீஸ் கேரக்டர் தரப்பட்டுள்ளது. 20 நாட்கள் அவர் நடிக்க ரூ. 50 கோடி சம்பளம் தரப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வழக்கமாக ஒரு மாஸ் ஹிட் படத்தின் 2ம் பாகம் என்றாலே பெரும்பாலும் தோல்வியை சந்திப்பது தமிழ் சினிமாவின் சென்டிமென்ட் ஆக உள்ளது. இதில் சில படங்கள் மட்டுமே தப்பி பிழைக்கின்றன. அதனால் ரஜினிகாந்த் முதன்முறையாக 2ம் பாகத்தில் நடிக்கும் ஜெயிலர் 2 படம் மாஸ் ஹிட் படமாக ஜெயிலர் முதல் பாகத்தை போலவே அமைய வேண்டும் என்பதில் இயக்குனர் நெல்சன் உறுதியாக இருக்கிறார்.
அதனால் ஜெயிலர் 2 படத்தை மிகவும் கவனமாக உஷாராக காட்சிக்கு காட்சி பார்த்து பார்த்து படப்பிடிப்பை திட்டமிட்டு நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை கேரளம் மாநிலத்தில் அட்டப்பாடி கோழிக்கோடு பகுதிகளை தொடர்ந்து அடுத்து கோவாவில் நடத்தப்படுகிறது. அதன்பிறகு ஐதராபாத்தில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே ஜெயிலர் 2 படம் குறித்த முக்கிய தகவலாக இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கிய ஜெயிலர் 2 படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் முடிவடைகிறது. ஏறக்குறைய 13 மாதங்கள் இந்த படப்பிடிப்பை நடத்த நெல்சன் திட்டமிட்டுள்ளார். அதாவது 400 வரை ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இவ்வளவு நாள் படப்பிடிப்பா என ரஜினி ரசிகர்கள் அசந்து போயிருக்கின்றனர்.





