- Advertisement -
Homeபொழுதுபோக்குஇவரா நான் கட்டிக்கப் போற மாப்பிள்ளை? எனக்கு கல்யாணமே வேண்டாம் - நடிகர் நெப்போலியனை ஏற்க...

இவரா நான் கட்டிக்கப் போற மாப்பிள்ளை? எனக்கு கல்யாணமே வேண்டாம் – நடிகர் நெப்போலியனை ஏற்க மறுத்த அவரது மனைவி – அவரே சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு சிறந்த கலைஞராக இருப்பவர் நடிகர் நெப்போலியன். எந்த கேரக்டர் என்றாலும் அதில் தனது சிறப்பான அழுத்தமான நடிப்பை தந்து விடுவார். குறிப்பாக தசாவதாரம் படத்தில் இரண்டாம் குலோத்துங்க சோழன் கேரக்டரில் அவரது நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் நெப்போலியன் கூறியதாவது, புதுநெல்லு புதுநாத்து படத்தில் பாரதிராஜா இயக்கத்தில் நான் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானேன். தொடர்ந்து பல படங்களில் நடித்தேன். அதில் ரஜினியுடன் எஜமான் படத்தில் வல்லவராயன் கேரக்டரில் நடித்தது எனக்கு பெரிய அடையாளத்தை ரசிகர்களிடம் கொடுத்தது.

- Advertisement -

வழக்கமாக ஹீரோதான் படத்தில் பஞ்ச் டயலாக் பேசுவார். ஆனால் இந்த படத்தில் நான் பஞ்ச் டயலாக் பேசி நடித்திருப்பேன். அந்த படம் வெளியான பிறகு எனக்கு வீட்டில் பெண் பார்க்கும் படலம் தீவிரமாக நடந்தது. அப்போதுதான் ஜெயசுதாவை எனக்கு திருமணம் செய்ய என் பெற்றோர் பெண் பார்த்தார்கள்.

அப்போது அவர் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தார். நான் பெண் பார்க்க சென்றிருந்தேன். அப்போது எஜமான் படத்தில் வில்லனாக நடித்தாரே, அந்த நெப்போலியன்தான் மாப்பிள்ளை என்று அவர்கள் வீட்டில் என்னை பற்றி சொல்லி இருக்கிறார்கள்.

- Advertisement -

உடனே ஜெயசுதா, இந்த திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்து விட்டார். இவரையா நான் கல்யாணம் பண்ணிக்கணும். இவர்தான் மாப்பிள்ளை என்றால் எனக்கு கல்யாணமே வேண்டாம். எஜமான் படத்தில் கருவில் இருந்த குழந்தைக்கே விஷம் கொடுத்து கொன்ற மோசமான மனிதர் இவர் என்று என்னை ஜெயசுதா மறுத்திருக்கிறார்.

அதன்பிறகு அது சினிமாவில் அவரது நடிப்பு எடுத்துச் சொல்லி ஒருவிதமாக பேசி சமாளித்து சம்மதிக்க வைத்து ஜெயசுதாவை எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அதன்பிறகு இத்தனை ஆண்டுகளாக அவர் எனக்கு நல்ல அன்பான மனைவியாக இருந்து சண்டை சச்சரவு இல்லாமல் குடும்பம் நடத்தி வருகிறார். நாங்கள் பிள்கைளுடன் சந்தோஷமாக இருக்கிறோம் என்று நடிகர் நெப்போலியன் அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்