- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவரை வெச்சு சீக்கிரமா ஒரு படம் பண்ணு, லோகேஷ் கனகராஜூக்கு அட்வைஸ் செய்த நடிகர் விஜய்...

அவரை வெச்சு சீக்கிரமா ஒரு படம் பண்ணு, லோகேஷ் கனகராஜூக்கு அட்வைஸ் செய்த நடிகர் விஜய் – உண்மையை போட்டுடைத்த இயக்குனர்!

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மிகவும் கவனம் பெற்ற முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். மாநகரம் படம்தான் அவர் இயக்கிய முதல் படம். திரில்லர் படமாக அந்த படத்தை பார்த்து ரசிகர்கள் அசந்து போய்விட்டனர். அதுவும் குறும்படங்கள் இயக்கிய அனுபவத்தில் உதவி இயக்குனராக யாரிடமும் பணி செய்யாமல் லோகேஷ் கனகராஜ் நேரடியாக இயக்கிய முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்றது.

அதன்பிறகு கார்த்தி நடித்த கைதி விஜய் நடித்த மாஸ்டர் கமல் நடித்த விக்ரம் ஆகிய படங்களும் பிளாக்பஸ்டர் படங்களாக பெரிய வெற்றிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு பெற்றுத் தந்தது. அதிலும் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. மேலும் இந்த படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் சூர்யா கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

அடுத்து விஜய் நடித்த லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தை இயக்கி உள்ளார். படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்த நிலையில் இப்போது படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி கூலி படம் ரிலீஸாகிறது.

கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நீண்ட காலத்துக்கு பிறகு நடிகர் சத்யராஜ் இணைந்து நடித்திருக்கிறார். மிஸ்டர் பாரத் படத்துக்கு பிறகு ரஜினியுடன் அவர் இந்த படத்தில்தான் நடித்திருக்கிறார். மேலும் நாகர்ஜூனா சவுபின் சாஹிர் உபேந்திரா அமீர்கான் ஸ்ருதிஹாசன் நித்யாராம் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு படமும் ரூ. 1000 கோடி வசூலை எட்டியதில்லை. அந்த பெருமையை நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்துக்கு கிடைக்குமா என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இதற்கிடையே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூலி படம் பிரமோசனுக்காக நேர்காணல்களில் பங்கேற்று படம் குறித்து பேசி வருகிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, மாஸ்டர் படம் ஷூட்டிங் நடந்த போது, சீக்கிரமா தலைவருக்கு ஒரு படம் பண்ணு என்று நடிகர் விஜய் என்னிடம் கூறினார். கண்டிப்பா பண்ணனும் அண்ணா என்று நான் அவரிடம் கூறினேன். பிறகு கூலி படம் ஷூட்டிங் நடந்த போது விஜய் அண்ணா தான் முதல் ஆளாக எனக்கு போன் பண்ணி வாழ்த்துகள் சொன்னார், என்று அந்த நேர்காணலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.

சற்று முன்