- Advertisement -
Homeபொழுதுபோக்குஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படத்துக்கு கர்நாடகா மாநிலத்தில் பலத்த எதிர்ப்பு; அதற்கு இப்படி ஒரு...

ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படத்துக்கு கர்நாடகா மாநிலத்தில் பலத்த எதிர்ப்பு; அதற்கு இப்படி ஒரு காரணமா? – தலைசுத்திப் போன ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் இயக்குனராக உள்ளார். ஆனால் கடந்த ஆண்டில் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வி அடைந்தது. கங்குவா, இந்தியன் 2 ஆகிய 2 படங்களும்தான் கடந்த ஆண்டில் மிக மிக ஆவலாக எதிர்பார்க்கப்பட்டு, மிக மோசமான பிளாப் ஆன படங்களாக இருந்தன.

இப்போது ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் என்ற நேரடி தெலுங்கு படம் வருகிற 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். ராம் சரண் கியாரா அத்வானி சமுத்திரக்கனி எஸ்ஜே சூர்யா போன்ற முக்கிய நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளனர்.

- Advertisement -

இந்த படத்தின் பிரமோசன் பணிகள் கடந்த 2 வாரங்களுக்காக விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. விஜயவாடாவில் படத்தின் ஹீரோ ராம் சரணுக்கு 250 அடி உயரத்தில் கட் அவுட் வைக்கப்பட்டு, ஹெலிகாப்டர் மூலம் கட் அவுட்டுக்கு பூக்கள் தூவப்பட்டன. தொடர்ந்து பிரமோசன் நிகழ்ச்சிகளில் ராம் சரணின் அப்பா நடிகர் சிரஞ்சீவி, சித்தப்பா துணை முதல்வர் பவன் கல்யாண், இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

வருகிற 7ம் தேதி சென்னையில் கேம் சேஞ்சர் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்துக்கொள்ள இருக்கிறார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜயும் இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

இந்த சூழலில் கேம் சேஞ்சர் படத்துக்கு கர்நாடகா மாநிலத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்குள்ள மக்கள் பலரும் அந்த மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் ஒட்டியுள்ள கேம் சேஞ்சர் பட போஸ்டர்களுக்கு கருப்பு தார் பூசி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கான காரணம்தான் பலரையும் ஆச்சரியப்படச் செய்துள்ளது.

அதாவது கேம் சேஞ்சர் படம் தெலுங்கு தமிழ் இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகிறது. கர்நாடகாவிலும் இந்த மொழிகளில்தான் இந்த படம் வெளியாக உள்ளது. கன்னட மொழியில் இந்த படம் வெளியாவதாக தகவல் இல்லை. பெரிய ஹீரோவின் மகன், பெரிய இயக்குனரின் படம் தங்களது மாநிலத்தில் கன்னட மொழியில் வெளியாகாமல் மற்ற மொழிகளில் வெளியாவதால், கேம் சேஞ்சர் படத்துக்கு கர்நாடகா மாநில மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்