- Advertisement -
Homeபொழுதுபோக்குமலையாள நடிகர் பகத் பாசிலுக்கு இப்படி ஒரு பழக்கம் இருக்குதா? டைரக்டர் பாலா, வெற்றி மாறனை...

மலையாள நடிகர் பகத் பாசிலுக்கு இப்படி ஒரு பழக்கம் இருக்குதா? டைரக்டர் பாலா, வெற்றி மாறனை எல்லாம் மிஞ்சிடுவாரு போல – ஆனா கடைசியா அந்த முடிவுக்கு அவர் வந்ததுதான் ஹைலைட்

- Advertisement -

பிரபல மலையாள பட இயக்குனர் பாசில். இவர் தமிழிலும் பல முக்கிய வெற்றிப் படங்களை இயக்கி இருக்கிறார். குறிப்பாக பூவிழி வாசலிலே, பூவே பூச்சூடவா, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு போன்ற படங்களை இயக்கியவர். இதில் அனைத்து படங்களே வெற்றிப் படங்களாக இருந்தன. அதுவும் காதலுக்கு மரியாதை, பூவே பூச்சூடவா படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் படங்களாக இருந்தன.

இப்படி தமிழிலும் மலையாளத்திலும் பல ஹிட் படங்களை தந்த இயக்குனர் பாசில் மகன்தான் பகத் பாசில். இவர் பல மலையாள படங்களில் நடித்து தன்னை சிறந்த ஆளுமை மிக்க நடிகராக வெளிப்படுத்தியவர். தமிழில் வேலைக்காரன், விக்ரம் உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்திருந்தார். இப்போது அவரது நடிப்பில் வெளியான ஆவேசம் படம் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

நடிப்பில் மிகுந்த ஆர்வம் மிக்க பகத் பாசில், தான் நடிக்கும் படங்களில் அவரும் ஒரு தயாரிப்பாளராக இருக்கிறார். மற்ற தயாரிப்பு நிறுவனங்கள் அவர் நடிக்கும் படத்தை தயாரித்தாலும் அவரும் ஒரு பங்குதாரராக தயாரிப்பில் தன்னை இணைத்துக்கொள்வது வழக்கம். ஏனெனில் படத்தின் வெற்றியில் தனக்கும் ஒரு கணிசமான லாபம் கிடைக்கும் என்பதால்தான்.

இந்நிலையில், அவர் நடிக்கும் படங்களில் ஒரு வாரம், 10 நாட்கள் ஷூட்டிங்கில் நடித்த பிறகு, திடீரென ஒரு நாள் வந்து அதுவரை எடுக்கப்பட்ட ஷூட்டிங் காட்சிகள் அனைத்தையும் தூக்கிப் போட்டுவிட்டு மீண்டும் புதிதாக காட்சிகளை எடுக்கச் சொல்வது பகத் பாசில் வழக்கம். இப்படி அவர் நடித்த படங்களில் பலமுறை நடந்திருக்கிறது.

இவ்வாறு பல நாட்கள் எடுக்கப்பட்ட காட்சிகளை குப்பை போல தூக்கி எறிவதால் பல லட்சங்கள், பல கோடிகள் தயாரிப்பில் வீண் செலவாகிறது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர்களில் பகத் பாசிலும் ஒருவர் என்பதால் மற்ற தயாரிப்பாளர்கள் இதுகுறித்து புகாரோ, குறையோ சொல்ல முடிவதில்லை. இதனால் மற்ற தயாரிப்பாளர்களுக்கு பலத்த நஷ்டம், மன உளைச்சல் ஏற்படுகிறது.

இதே போல் தமிழ் இயக்குனர்களில் பாலா, வெற்றிமாறன் இதே மனநிலையில் நடந்துக் கொள்பவர்கள்தான். பெரிய இயக்குனர்களாக இருந்தும், அவர்களது இந்த குளறுபடியான செயலால், தயாரிப்பாளர்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்படுகிறது. ஆனால் மலையாள நடிகர் பகத் பாசில், தன்னுடைய செயலின் தவறை தற்போது உணர்ந்து விட்டார். அதனால், இனிமேல் அவர் நடிக்கும் படங்களை அவர் மட்டுமே தயாரிப்பது, அதில் இப்படி 10 நாட்கள், 15 நாட்கள் நடந்த ஷூட்டிங்கை காட்சிகளை நிராகரித்தால், அதனால் ஏற்படும் தயாரிப்பு நஷ்டங்களுக்கு தானே பொறுப்பு ஏற்பது என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

சற்று முன்