- Advertisement -
Homeபொழுதுபோக்குலோகேஷ் கனகராஜ் போடும் அந்த கணக்கு… - 2026 சட்டசபை தேர்தல் முடிவுதான் தீர்மானிக்கும்… இதுல...

லோகேஷ் கனகராஜ் போடும் அந்த கணக்கு… – 2026 சட்டசபை தேர்தல் முடிவுதான் தீர்மானிக்கும்… இதுல வேறொரு கணக்கும் போடறாங்களே?

- Advertisement -

எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணிபுரிந்து பயிற்சி பெறாமல் நேரடியாக இயக்குனராக களத்தில் இறங்கி ஜெயித்தனர் லோகேஷ் கனகராஜ். கோவையில் கல்லூரியில் படித்த காலகட்டத்தில் குறும்படங்களை இயக்கிய அனுபவமே அவரை ஒரு திரைப்பட இயக்குனராக ஜெயிக்க வைத்திருக்கிறது.

மாநகரம் படம்தான் லோகேஷ் இயக்கிய முதல் படம். தமிழ் சினிமாவில் இந்த படம் பெரிய வரவேற்பை கவனிப்பை ரசிகர்களிடம் பெற்றது. தொடர்ந்து கார்த்தி நடித்த கைதி விஜய் நடித்த மாஸ்டர் கமல் நடித்த விக்ரம் விஜய் நடித்த லியோ ஆகிய படங்களும் மாஸ் ஹிட் படங்களாக லோகேஷ் கனகராஜூக்கு பெரிய செல்வாக்கை தமிழ் சினிமா துறையில் பெற்றுத் தந்தது.

இப்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி 2 படத்தை இயக்க தயாராகி வருகிறார். கூலி பிரமோசன் பணிகளில் தீவிரம் காட்டி வரும் லோகேஷ் கனகராஜ் சில மாதங்களில் கைதி 2 படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரசிகர்கள் எல்லாம் விஜய் நடிப்பில் லியோ 2 படத்தை பார்க்க ஆசைப்படுகின்றனர். நான் மாஸ்டர் 2 படத்தை இயக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியிருந்தார். இதன்மூலம் லியோ 2 மாஸ்டர் 2 படங்களை இயக்க லோகேஷ் கனகராஜூக்கு ஆசை இருப்பதை தெரியப்படுத்தி விட்டார்.

அதே போல் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்தாண்டில் வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படத்தையும் 2ம் பாகமாக இயக்க வெங்கட்பிரபுவுக்கு விருப்பம் இருக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ்சில் அப்படிதான் வெங்கட்பிரபு காட்டியிருந்தார்.

நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் படத்துடன் நடிப்பை விட்டு விலகுவதாக அறிவித்து விட்டார். ஒருவேளை 2026ம் ஆண்டு தேர்தல் முடிவுக்கு பின் விஜய் மீண்டும் நடிக்க வந்தால் லியோ 2 மாஸ்டர் 2 தி கோட் 2 படங்களில் மீண்டும் நடிகர் விஜய் நடிக்க அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை அவர் தமிழக முதல்வராகி விட்டால், இதே கதைகளில் வேறு ஹீரோக்களை நடிக்க வைக்கவும் இயக்குனர்களிடம் ஒரு புதிய திட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்