நடிகர் சூரி நடிப்பில் கடந்த 16ம் தேதி வெளியான படம் மாமன். விலங்கு என்ற வெப் சிரீஸ் இயக்கிய இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன், மாமன் படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தின் கதை நடிகர் சூரிக்கு சொந்தமானது. நான் இதுவரை பார்த்த பழகிய மனிதர்களின் வாழ்வில் இருந்து இந்த மாமன் கதையை எடுத்ததாக நடிகர் சூரியே கூறியிருக்கிறார்.
ஆக்சன் அதிரடி படங்களுக்கு மத்தியில் சென்டிமென்ட் படங்களுக்கு ரசிகர்கள் எப்போதுமே நல்ல வரவேற்பு தருவார்கள் என்பதை உணர்ந்துக்கொண்ட நடிகர் சூரி, மாமன் படத்தின் கதையை குடும்ப கதையாக கொடுத்திருக்கிறார். தாய் மாமன் உறவை மையப்படுத்திய கதையில் தன் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
குறிப்பாக ஐஸ்வர்யா லட்சுமி லப்பர் பந்து நடிகை சுவாசிகா ராஜ்கிரண் ஜெயப்பிரகாஷ் போன்றவர்களின் நடிப்பு படத்துக்கு பெரிய பக்கபலமாக இருந்திருக்கிறது. இன்னும் இதுபோன்ற உறவுகளை மையப்படுத்திய கதைகளில் நடிக்க இருப்பதாகவும் நடிகர் சூரி தொடர்ந்து கூறி வருகிறார். இது ஹீரோவாக எனது பயணம் சினிமாவில் நீடிக்கும் என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
இந்த சூழலில் நடிகர் சூரி மாமன் படம் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார். திருப்பூர் திண்டுக்கல் திருச்சி மதுரை என பல மாவட்டங்களுக்கு நடிகர் சூரி சென்று தியேட்டர் விசிட் அடித்து வருகிறார். அங்கு ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் தயங்காமல் பதில் அளித்து வருகிறார்.
இந்நிலையில் சேலத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற நடிகர் சூரியிடம், நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்ற ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் சூரி, இதுவே நல்லா போய்கிட்டு இருக்குது. நீங்க சொல்றதுதான். கதாநாயகனாக நடிப்பதே நல்லா போகுதுன்னு என்றால் என்னை அப்படியே விட்டுடுங்க.
சினிமா ஹீரோவாக இதுலேயே போயிட்டே இருப்போம். அரசியல் அது வேற பாதை. நான் இப்போ போயிட்டிக்கிற பாதை எங்க கட் ஆகும் எங்கே பிரியும் என்றே எனக்கு தெரியாது. இப்போ போயிட்டு இருக்கிற பாதையிலேயே போவோம். நல்லாத்தானே போயிட்டு இருக்குது? என்று பதிலளித்தார். இதுவரை விடுதலை கருடன் கொட்டுக்காளி மாமன் என 4 படங்களில்தான் சூரி நாயகனாக நடித்திருக்கிறார். அதற்குள் அவர் அரசியலுக்கு வருவாரா என்பது அவசியம்தானா என ரசிகர்கள் தலையில் அடித்துக்கொள்கின்றனர்.





