- Advertisement -
Homeபொழுதுபோக்குகேரளாவில் கூலி படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் கொடுத்த நிர்பந்தம், வினியோகஸ்தர்கள் தரப்பில் நீடிக்கும்...

கேரளாவில் கூலி படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் கொடுத்த நிர்பந்தம், வினியோகஸ்தர்கள் தரப்பில் நீடிக்கும் நெருக்கடி!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாகி உள்ளது. படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் முடிந்த நிலையில் இப்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் கைதி படங்களின் வரிசையில் கூலி படமும் பெரிய அளவில் மாஸ் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த படத்தில் ரஜினியுடன் இந்தி நடிகர் அமீர்கான் மலையாள நடிகர் சவுபிர் சாஹிர் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா கன்னட நடிகர் உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் சத்யராஜ் நித்யாராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.

- Advertisement -

வருகிற ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி உலகம் முழுவதும் கூலி படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த சூழலில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூலி படத்தின் வியாபாரத்தை ஆரம்பித்து விட்டது. மாநிலங்கள் வாரியாக கூலி படத்தை தியேட்டர்களில் வெளியிடும் உரிமைக்கு விலை பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கேரளம் மாநிலத்தில் கூலி படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ. 20 கோடி விலை பேசி வருகிறது. ஆனால் நடிகர் ரஜினிகாந்த் படங்களுக்கு கேரளம் மாநிலத்தில் அதிகபட்ச தியேட்டர் வெளியீடு விலை ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரைதான். கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் ரூ. 4 கோடிக்கு தான் கேரளம் மாநிலத்துக்கு தியேட்டர் ரிலீஸ் விலையாக தரப்பட்டது.

- Advertisement -

ஆனால் அந்த படம் ரூ. 24 கோடிக்கு மேல் தியேட்டர்களுக்கு ஷேர் கொடுத்த மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்தது. ஆனால் இந்த முறை அந்த வெற்றியை கவனத்தில் வைத்து, சன் பிக்சர்ஸ் நிறுவனம் கேரளாவில் கூலி படத்தை தியேட்டர்களில் வெளியிட ரூ. 20 கோடி ரூபாய் விலை நிர்ணயித்திருக்கிறது. அந்த விலைக்குதான் தருவது என்பதில் உறுதியாக உள்ளது.

ஆனால் ஜெயிலர் படம் போல கூலி படமும் அந்தளவுக்கு மாஸ் ஹிட் தருமா என்ற கேள்வி கேரளம் மாநிலம் தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான படம் என்பதால் அதிகபட்சம் ரூ. 8 கோடி முதல் ரூ. 10 கோடி வரை தியேட்டர் ரிலீஸ் விலையாக தரலாம். அதற்கு மேல் வாய்ப்பில்லை என்ற கேரளம் மாநில விநியோகஸ்தர்கள் தரப்பில் பதில் கிடைத்துள்ளது. இதில் சன் பிக்சர்ஸ் என்ன முடிவுக்கு வரப் போகிறது என்பது தெரியவில்லை.

- Advertisement -

சற்று முன்