தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர் விஜயகுமார். எம்ஜிஆர் காலத்தில் இருந்து நடித்துக்கொண்டு இருக்கிறார். விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். நடிகர் ஆகாஷ், ராஜன் ஆனந்த், பீட்டர் பவுல் என 3 பேரை திருமணம் செய்த நிலையில் 3 கணவர்களையும் பிரிந்து வாழ்ந்து வருகிறார். வனிதாவுக்கு ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா விஜயகுமார் என்ற மகளும் இருக்கின்றனர். ஜோவிகா விஜயகுமார், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்.
ஜோவிகா விஜயகுமார் இப்போது மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை வனிதா விஜயகுமார் டைரக்ட் செய்து அவரும் நடித்திருக்கிறார். ராபர்ட் மாஸ்டர் ஸ்ரீமன் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் பாத்திமா பாபு ஆர்த்தி கணேஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது.
சமீபத்தில் மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவில் படத்தின் இயக்குனர் நடிகை வனிதா விஜயகுமார் பேசியதாவது, என் மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது எதற்கு அவருடைய பெயர் ஜோவிகா விஜயகுமார் என இருக்கிறது என பலவிதமான கமெண்ட்டுகள் வந்தன. அந்த கமெண்ட்களை நான் மதிக்க மாட்டேன் என்றாலும் அதில் என்னென்ன கமெண்ட்கள் வருகிறது என்பதை படிப்பேன்.
இந்த மேடையில் அதற்கு பதில் தர நினைக்கிறேன். என்னுடைய பெயர் வனிதா விஜயகுமார். திருமணமான பிறகும் நான் அதே பெயரோடு தான் இருந்தேன். நான் என் பெயரை மாற்றிக் கொள்ளவே இல்லை. எனக்கு மாற்றவும் தோன்றவில்லை. எனக்கு திருமணம் ஆகி ஸ்ரீஹரி பிறந்து 3 ஆண்டுகள் கழித்து ஒரு பிரச்னையில் சிக்கிக் கொண்டேன்.
அப்போது நான் கர்ப்பமாக இருந்ததால் என்னுடைய அப்பா அந்த குழந்தையை நான் நன்றாக பெற்றெடுக்க வேண்டும் என்பதற்காக என்னை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார். அங்குதான் ஜோவிகா பிறந்தாள். அமெரிக்காவின் குழந்தை பிறந்த உடனே அந்த குழந்தையின் பெயரை பதிவு செய்து விடுவதுதான் அங்கு இருக்கும் முறை. அதனால் குழந்தையின் பெயர் என்னவென்று கேட்டார்கள். அந்த நேரத்தில் என்னுடைய மனதில் தோன்றியது ஜோவிகா விஜயகுமார்.
ஏனென்றால் அந்த குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று நினைத்தவர் என்னுடைய அப்பா. அதற்காக என்னுடைய மகளுக்கும் என் தந்தையின் பெயரை வைக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த குழந்தை தயாரித்த படத்தை நான் இயக்கி நடித்தும் இருக்கிறேன். படத்தை பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என்று வனிதா விஜயகுமார் அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





