- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்படி உருவாக்கப்படும் படங்களை நான் வெறுக்கிறேன் - ரெட்ரோ பட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த...

அப்படி உருவாக்கப்படும் படங்களை நான் வெறுக்கிறேன் – ரெட்ரோ பட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். பீட்சா இறைவி ஜிகர்தண்டா ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மகான் பேட்ட உள்ளிட்ட படங்களை இயக்கியவர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தை மாஸ் ஆன படமாக கார்த்திக் சுப்பராஜ் தந்திருந்தார். அவர் மிக தீவிரமான ரஜினி ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் கார்த்திக் சுப்பராஜ் எந்த கதையை எழுதினாலும் முதலில் அதில் அவர் ஹீரோவாக நினைப்பது சூப்பர் ஸ்டார் ரஜினியை தான். அதன்பிறகு மற்ற ஹீரோ அதில் நடிக்கும் பட்சத்தில் அவருக்கேற்ப கதையில், காட்சிகளில் மாற்றமும் திருத்தமும் செய்துவிடுவது அவரது வழக்கம். சூர்யா நடித்த ரெட்ரோ படமும் கூட முதலில் ரஜினியை மனதில் வைத்து உருவாக்கிய கதை தான் என்று கார்த்திக் சுப்பராஜே கூறியிருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில்தான் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படம் கடந்த மே 1ம் தேதி வெளியானது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் ஜெயராம் கருணாகரன் நாசர் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சூர்யா நடித்த இந்த படம் வெளியானது.

உலகம் முழுவதும் இந்த படம் 235 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதில் சேட்டிலைட் டிஜிட்டல் ரைட்ஸ் ஆடியோ ரைட்ஸ் ஆகிய வருமானங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கணிசமான வசூலை அடுத்து ரெட்ரோ பட விழாவில் நடிகர் சூர்யா, ரூ. 10 கோடியை அகரம் பவுண்டேசனுக்கு நன்கொடையாக வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறியதாவது, 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் இயக்க வேண்டும் என்றால் அதில் எண்ணற்ற கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இடம்பெற வேண்டியுள்ளது. அதனை கிரீன் ஸ்கிரீனில் படம் பிடிக்க வேண்டிய தேவை உள்ளது. அது போன்ற படங்கள் எடுப்பதை நான் வெறுக்கிறேன்.

உண்மையான கதைகளத்தில் உண்மையான மனிதர்களுக்கு மத்தியில் உண்மையான படத்தை எடுக்கவே விரும்புகிறேன். அந்த 1000 கோடி ரூபாயில் 20 அல்லது 30 படங்களை நான் டைரக்ட் செய்து விடுவேன் என்று இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்