திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தமிழ்நாடு அளவில் பிரபலமானவர். தனியாக யூட்யூப் சேனல் ஆரம்பித்து திரைப்படங்களை நக்கலோடு விமர்சனம் செய்யக்கூடியவர். அவரது விமர்சனத்துக்கு பயந்த திரைத்துறையை சேர்ந்த பலர் இருக்கிறார்கள். அவரது விமர்சனத்துக்கு வரவேற்பு இருந்தாலும் உருவ கேலி செய்கிறார், எல்லோரையும் மட்டம் தட்டி பேசுகிறார் என்ற குற்றச்சாட்டு சமீபகாலமாக எழுந்திருக்கிறது.
இதற்கிடையே திரைப்படங்களை பங்கமாக கலாய்க்கும் அவரை பார்த்து நீங்கள் ஒரு படம் எடுங்களேன் என பலர் வலியுறுத்த அவர் ஆண்ட்டி இந்தியன் என்ற படத்தை இயக்கினார். படம் அட்டர் ஃப்ளாப் ஆனது. அதனையடுத்து ப்ளூ சட்டையை பலரும் விமர்சிக்க தொடங்கினர். இனியாவது படத்தை பற்றி விமர்சனம் செய்யும்போது கொஞ்சம் பக்குவமாக பண்ணுங்கள் என வெளிப்படையாக கூற ஆரம்பித்தனர். ஆனால் அவரோ அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்வதில்லை.
முன்னதாக படம் வெளியான பிறகு விமர்சித்த அவர் ஜெயிலர் படம் ரிலீஸாவதற்கு முன்னதாகவே விமர்சனம் செய்துவருகிறார். அதற்கு காரணம் ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் நடக்கும் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துதான். விஜய்தான் வியாபாரத்தில் நம்பர் 1 என்ற கூட்டத்தில் ப்ளூ சட்டை மாறனும் ஒருவர். இந்தப் பஞ்சாயத்து ஆரம்பித்ததிலிருந்தே ரஜினிகாந்த்தை கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார் மாறன்.
குறிப்பாக ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் காக்கா, கழுகு கதையை கூறியவுடன் ரஜினிகாந்த்தை ப்ளூ சட்டை மாறன் பருந்து என்றே குறிப்பிட்டு வருகிறார். இது பலரிடம் கண்டனத்தை எழுப்பிவருகிறது. என்னதான் இருந்தாலும் ரஜினிகாந்த் மூத்த கலைஞர் அவருக்கு உரிய மரியாதை மாறன் கொடுக்க வேண்டும் என ரஜினி ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஆனால் அதெல்லாம் அவருக்கு ஒரு மேட்டராகவே தெரியவில்லை.
இப்படிப்பட்ட சூழலில் ஜெயிலர் படத்தின் ப்ரீ புக்கிங் சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் தொடங்கியது. எனவே பலரும் டிக்கெட்டை தொடர்ந்து புக் செய்துவருவதாகவும், அமெரிக்காவில் மூன்று வாரங்களுக்கு ஜெயிலர் படத்துக்கான காட்சிகள் ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது அதனை பங்கமாக கலாய்த்து ட்வீட் செய்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.
USA: 3 weeks housefull in reservation. Marana mass!!
'அவதார் கூட புக்கிங் ஓப்பன் ஆனதும் 3 வாரம் ஃபுல் ஆகாது. காதுல பூ சுத்தலாம். ஆனா பூந்தொட்டியை தூக்கி வக்காதீங்கடா' pic.twitter.com/j0ASOSjCUW
— Blue Sattai Maran (@tamiltalkies) August 7, 2023
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “USA: 3 weeks housefull in reservation. Marana mass!! ‘அவதார் கூட புக்கிங் ஓப்பன் ஆனதும் 3 வாரம் ஃபுல் ஆகாது. காதுல பூ சுத்தலாம். ஆனா பூந்தொட்டியை தூக்கி வக்காதீங்கடா” என குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர். முன்னதாக இந்தியாவில் நேற்று ஜெயிலர் டிக்கெட் புக்கிங் தொடங்கியதாகவும் பல தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.





