- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை மட்டும் சொல்லும் சினிமா ஜாம்பவான்களே இது உங்களுக்குகாகத்தான்.. ப்ளூ சட்டை மாறன் ட்வீட்

என்னை மட்டும் சொல்லும் சினிமா ஜாம்பவான்களே இது உங்களுக்குகாகத்தான்.. ப்ளூ சட்டை மாறன் ட்வீட்

- Advertisement -

பிரபல திரைவிமர்சகராக விளங்குபவர் ப்ளூ சட்டை மாறன். அவரது ஒவ்வொரு விமர்சனத்திலும் நக்கலும், நையாண்டியும் அதிகம் இருப்பதால் ஆரம்பத்தில் அவருக்கு என்று ரசிகர்கள் அதிகமாக இருந்தனர். இருந்தாலும் போகப் போக அவரது விமர்சனத்தில் நக்கலும், நையாண்டியும் மட்டுமே இருந்ததால் ரசிகர்கள் குறைய ஆரம்பித்தனர்.

படத்தை மட்டும் விமர்சிக்காமல் நடிகர்களை உருவகேலி செய்தும், மகா மட்டமாக பேசியும் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார் என்ற விமர்சனம் இன்னமும் உண்டு. அதேசமயம் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தில் நேர்மை இருக்கிறது என்ற கருத்தும் ஒரு சிலர் கூறுவது உண்டு. எது எப்படியோ ப்ளூ சட்டை மாறன் போன்ற விமர்சகர்கள் எல்லை மீறி செல்கிறார்கள் என்பதுதான் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது.

- Advertisement -

தற்போது ஸ்மார்ட் போன் உலகம் என்பதால் எல்லோருமே திரைவிமர்சகர்களாகவும், இயக்குர்களாகவும் மாறிவிட்டனர் என்ற கருத்தும் பலரிடம் இருக்கிறது. முக்கியமாக 90களில் சன் டிவியில் ஒளிபரப்பான டாப் டென் மூவிஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரமேஷ் என்பவர்கூட நாங்கள் விமர்சனம் செய்யும் போது இவ்வளவு மட்டமாக பேசியதில்லை என்று அண்மையில் ஒரு விழாவில் கலந்து கொள்ளும்போது தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது

ப்ளூ சட்டை மாறன் போலவே பரத்வாஜ் ரங்கராஜன் என்பவரும் சினிமா விமர்சகர்தான். தற்போது தனியார் ஊடகத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் அவர் ஆரம்பத்தில் தன்னுடைய பிளாக்கில் விமர்சனத்தை எழுதி வந்தவர். முக்கியமாக தமிழ் படங்களை ஆங்கிலத்தில் அவர் விமர்சிப்பதால் பிரபலமடைந்திருக்கிறார்

- Advertisement -

இந்நிலையில் பரத்வாஜ் ரங்கராஜன் குறித்து ப்ளூ அச்ட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “அறிமுக இயக்குனர் ராகவன் படம் எடுப்பதற்கு பதில் பட்டாப்பட்டி டிரவுசர் விற்கப்போகலாம் என்று சொன்னது யார்? அதன் பின்னணி என்ன? தரம் தாழ்ந்த விமர்சனம், தனிநபர் தாக்குதல் கூடாது என்று எனக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆகச்சிறந்த அறிவுரை தந்து வரும் சினிமா சார்ந்த ஜாம்பவான்களே. இப்பதிவு உங்களுக்கானது.

ராஜ்கிரண், விமல் மற்றும் லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிக்க இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் 2014 இல் வெளியிட்ட படம் மஞ்சப்பை. தயாரிப்பு – சற்குணம். இயக்கம் – ராகவன். மஞ்சப்பை படம் சிலருக்கு பிடிக்காமலும் போகலாம். அதன் குறைகளை விமர்சிக்கவும் உரிமையுண்டு. எனக்கும் இப்படம் பிடிக்கவில்லை.

இப்போது நான் கூறவிருப்பது மஞ்சப்பை படத்திற்கு வந்த இன்னொரு விமர்சனம் பற்றிதான். அதை எழுதியவர் தற்போது கலாட்டா ப்ளஸ் யூட்யூப் சேனலில் ஆங்கில விமர்சகராக இருக்கும் பரத்வாஜ் ரங்கன். இவருக்கும், எனக்கும் எவ்வித மனஸ்தாபமும் இதுவரை இல்லை. அவர் தன் வழியில் பயணிக்கிறார். தமிழ்ப்படங்களை ஆங்கிலத்தில் விமர்சிப்போர் லிஸ்டில் நம்பர் 1 ஆக இருப்பது இவர்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால் இவர் 2014 இல் எழுதிய மஞ்சப்பை விமர்சனத்தில் நிறை, குறைகளை கூறிவிட்டு இறுதியாக இயக்குனர் ராகவனை கடுமையாக திட்டியுள்ளார் பணம் சம்பாதிக்கத்தான் இயக்குனர்கள் படம் எடுக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க இயலாது. ஆனால் பணம் சம்பாதிப்பதை மட்டுமே பிரதான குறிக்கோளாக எண்ணி, ‘கலை’ வடிவத்தை இல்லாமல் செய்தால்? இவர் எல்லாம் எதற்கு படமெடுக்கிறார் என்று ஆச்சர்யப்படுகிறேன்.

இவர் ஏன் பட்டாப்பட்டி உள்ளாடை தயாரிக்கும் தொழிலை செய்யக்கூடாது? இந்த உள்ளாடைகளுக்கு கிராமப்புறங்களில் நல்ல மார்க்கெட் இருக்கிறதே. அதை செய்யாமல் ஏன் கலைத்துறைக்கு வந்தார்” என கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும் பல விஷயங்களையும் அவர் அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்