- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது, விஜய் கையை பிடிச்சுட்டு போய் பிரதமர் சீட்டுல அவர் உட்கார வைப்பாரா? - தவெக...

என்னது, விஜய் கையை பிடிச்சுட்டு போய் பிரதமர் சீட்டுல அவர் உட்கார வைப்பாரா? – தவெக பெண் எம்எல்ஏ பேச்சால் அதிர்ந்த அரசியல் களம்!

- Advertisement -

நடிகராக இருந்த விஜய் இப்போது தமிழக முதல்வராக இருந்து வருகிறார். அவரது தலைமையில் தவெக ஆட்சி 100 நாட்களை கடந்துள்ளது. பல்வேறு விமர்சனங்கள் சர்ச்சைகளுக்கு மத்தியில் அவரது ஆட்சி நடந்து வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள தவெக ஆட்சி, திமுகவை வசைபாடுவது மக்களை எரிச்சலடைய செய்துள்ளது.

இதற்கிடையே சமீப நாட்களாக இந்தியாவின் அடுத்த பிரதமர் விஜய்தான் என்ற கோஷம் தவெகவினர் மத்தியில் அதிகரித்து வருகிறது. இது பாஜக வினரை காட்டிலும் காங்கிரஸ் கட்சியினரை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 2029ல் பிரதம வேட்பாளர் ராகுல் என்றால் மட்டுமே தவெக கூட்டணியில் தொடர்வோம் என்று ஏற்கனவே காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த சூழலில் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தவெக பெண் எம்எல்ஏ கனிமொழி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், 2029ம் ஆண்டில் இந்தியாவின் பிரதமர் விஜய்தான். அவரது கையை பிடித்து அழைத்துக்கொண்டு போய் பிரதமர் இருக்கையில் ராகுல்காந்தி அமர வைப்பார் என்று கூறி சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை தந்துள்ளது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் முதல்வராக விஜயின் ஆட்சி குறித்து பெரும்பாலான மக்களிடம் அதிருப்தியும் கோபமும் நிலவுகிறது. குறிப்பாக எம்எல்ஏக்களுக்கு கார், பெட்ரோல் செலவுடன் உதவியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 75 ஆயிரம் சம்பளம் என்று அறிவித்தது கடும் சர்ச்சையாக மாறியுள்ளது. மேலும் நேற்று மேட்டூர் அணை திறக்க வந்த முதல்வர் விஜய்க்காக ரூ. 5 கோடிக்கு மேல் செலவு ஆனதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் சட்டசபையில் பேசிய தவெக எம்எல்ஏ கல்லணை, மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் கல்வி கட்டணம் அதிகமாக உள்ளதால் அங்கு படிக்கும் வசதியற்ற மாணவர்கள் பணம் கட்ட முடியாமல் தவிக்கின்றனர். அதனால் மதுரை காமராஜர் பல்கலை கழகத்தை அரசு கல்லுாரியாக மாற்ற வேண்டும் என்று விசித்திரமான ஒரு கோரிக்கை விடுத்து பேசியிருக்கிறார்.

இதை பார்த்து மக்கள் நெற்றியில் அடித்துக்கொண்டு இப்படியும் ஒரு முட்டாள்தனமான கோரிக்கையா? பல்கலைக்கழகத்தை யாராவது அரசு கல்லூரியாக மாற்றச் சொல்வார்களா? இப்படியும் ஒரு முட்டாள்தனமான கோரிக்கையா என்று திட்டி தீர்த்து வருகின்றனர். இதற்கிடையே இப்போது 2029ல் விஜய்தான் பிரதமர் என்று தவெக பெண் எம்எல்ஏ கனிமொழி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்திலும் தமிழக மக்கள் மத்தியிலும் பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்