- Advertisement -
Homeபொழுதுபோக்குதனக்கு மாஸ் ஹிட் கொடுத்த டைரக்டருக்கு தனது படத்தில் ஒரு வாய்ப்பு தருவாரா நடிகர் அஜீத்குமார்?...

தனக்கு மாஸ் ஹிட் கொடுத்த டைரக்டருக்கு தனது படத்தில் ஒரு வாய்ப்பு தருவாரா நடிகர் அஜீத்குமார்? – எல்லாம் ஆதிக் ரவிச்சந்திரன் கையில்தான் இருக்குது….

- Advertisement -

தமிழ் சினிமாவில் டாப் லெவல் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜீத்குமார். இந்த ஆண்டில் அவரது விடாமுயற்சி குட் பேட் அக்லி என 2 படங்கள் வெளியான நிலையில் விடாமுயற்சி போதிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி படம் மாஸ் ஹிட் படமாக இருந்தது.

வெளிநாடுகளில் தொடர்ந்து 10 மாதங்களுக்கு நடக்கும் கார் ரேஸில் நடிகர் அஜீத்குமார் கலந்துக்கொண்டு வருகிறார். கடந்த ஜனவரி மாதம் துவங்கிய கார் ரேஸ் வருகிற அக்டோபர் மாதம் தான் முடிவடைய உள்ளது. அதன்பிறகு தான் அவர் நவம்பர் மாதத்தில் தனது அடுத்த படத்தில் நடிக்கிறார்.

- Advertisement -

குட் பேட் அக்லி படம் மாஸ் ஹிட் கொடுத்ததால் அடுத்த படமும் ஆதிக் ரவிச்சந்திரனுடன்தான் என்று அஜீத்குமார் முடிவு செய்துவிட்டார். அதனால் அதற்கான ஸ்டோரி டிஸ்கஷனில் ஆதிக் ரவிச்சந்திரன் பிஸியாக இருந்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற நவம்பரில் துவங்கி அடுத்த மார்ச் மாத இறுதிக்குள் முடிவடைய உள்ளது.

அதன்பிறகு 2026 ஏப்ரல் மாதத்தில் துவங்கும் கார் ரேஸில் அஜீத்குமார் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். அந்த படம் மே 1ம் தேதி அஜீத்குமார் பிறந்த நாளில் தொழிலாளர் தினத்தன்று ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்ஜே சூர்யா ஆர்வம் காட்டி வருகிறார்.

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் வாலி படத்தை இயக்கி தமிழ் சினிமாவுக்குள் இயக்குனராக வந்தவர்தான் எஸ்ஜே சூர்யா. அந்த படத்தில் அஜீத்குமார் அண்ணன் தம்பி என 2 வேடங்களில் நடித்திருந்தார். அஜீத்குமார் வில்லனாக நடித்த முதல் படமும் அதுதான். நடிகை சிம்ரனுக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்த முதல் படமும் இதுதான்.

நடிகர் விஜயுடன் மெர்சல் படத்தில் எஸ்ஜே சூர்யா நடித்து விட்டார். சிம்பு தனுஷ் கமல் மகேஷ்பாபு உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் நடித்த நிலையில் நடிகர் அஜீத்குமாருடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் நடிகர் எஸ்ஜே சூர்யா இருந்து வருகிறார். அதனால் அஜீத்குமாரின் அடுத்த படத்தில் நடிக்க ஆதிக் ரவிச்சந்திரனிடம் அப்ளிகேசன் போட்டிருக்கிறார். அஜீத்குமாரின் சம்மதம் பெறுவது, எஸ்ஜே சூர்யாவுக்கு வலுவான கேரக்டர் உருவாக்குவது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கைகளில்தான் இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்