- Advertisement -
Homeபொழுதுபோக்குஎந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு நிலமை வரக்கூடாது, அதுதான் என் வாழ்க்கையை மாற்றியது - ராமராஜனை...

எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு நிலமை வரக்கூடாது, அதுதான் என் வாழ்க்கையை மாற்றியது – ராமராஜனை பிரிந்தது குறித்து நடிகை நளினி சொன்ன உண்மைகள்!

- Advertisement -

கடந்த 1980களில் தமிழில் முன்னணி நட்சத்திர நாயகியாக வலம் வந்தவர் நடிகை நளினி. இப்போதும் வயதான நிலையில் குணச்சித்திர வேடங்களில் அம்மா பாட்டியாக நடித்து வருகிறார். நடிகர் ராமராஜனை காதல் திருமணம் செய்த அவர் ஒரு கட்டத்தில் பிரிந்து விட்டார். ஆனால் இருவருமே மறுமணம் செய்துக்கொள்ளாமல் தனித்து வாழ்கின்றனர்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை நளினி கூறியதாவது, என் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய சோகம் என் விவாகரத்து தான். என்னை சுற்றி எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு என் கணவருடன் 14 வருடம் வாழ்ந்தேன். ஆனால் நானும் அவரும் பிரிந்து விடலாம் என்று முடிவு செய்த பிறகு எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

- Advertisement -

மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தன்று எனக்கு விவாகரத்து கிடைத்தது. அந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு நிலைமை வரவேக்கூடாது. நான் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒருத்தர் கூடத்தான் வாழ வேண்டும் என்ற முடிவில் இருந்தேன். அந்த முடிவில் இருந்து நான் என்னைக்குமே மாறியது இல்லை.

அவர் இல்லாமல் இன்னொருவருடன் நான் வாழ வேண்டும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அவர் இல்லாத வாழ்க்கையில் நாம வாழ்ந்து என்ன என்று தற்கொலை முடிவிற்கு வந்தேன். ஆனால் இன்னைக்கு அவர் முன்னாடி நான் தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்றால் அது ரசிகர்களாகிய மக்களால் தான்.

- Advertisement -

அவரை விட்டு பிரியும் போது என்னால் தனியாக வாழ முடியும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை, செத்து போய்விடலாம் என்றுதான் நினைத்தேன். நாம செத்துட்டா குழந்தைகள் என்ன ஆவாங்க என்று நினைத்து என் குழந்தைகளுடன் சேர்ந்து செத்து போய்டலாம்ன்னு நினைத்தேன். அந்த நேரத்தில் தான் குட்டி பத்மினி கிருஷ்ணதாசி சீரியலில் நீ நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

அப்போது கூட எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று தோன்றவில்லை. ஆனால், அவர்கள் என்னை மோல்டு பண்ணாங்க. ஆனால், கிருஷ்ணதாசி சீரியலில் நான் நடித்த மனோன்மணி கதாபாத்திரம் தான் என் வாழ்க்கையையும் என்னையும் மாற்றியது. இன்னைக்கு ஒரு தைரியமான பெண்ணாக நான் இருப்பதற்கு காரணம் அந்த சீரியல் தான். இதனால் பெரிய திரையைவிட சின்னத்திரையை மிகவும் நேசிக்கிறேன் என்று நளினி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்