- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் திலகம் வாழ்ந்து மறைந்த அன்னை இல்லம் - பின்னணியில் இத்தனை விஷயம் இருக்குதா? சிவாஜி...

நடிகர் திலகம் வாழ்ந்து மறைந்த அன்னை இல்லம் – பின்னணியில் இத்தனை விஷயம் இருக்குதா? சிவாஜி ரசிகர்களுக்கே இது தெரியாதே?

- Advertisement -

பொதுவாகவே நடிகர்களின் இல்லம் என்பது மிகவும் வசதியான நவீன மாளிகையை போலவே இருக்கும். ஆரம்பத்தில் சாதாரண வீடுகளாக கட்டிய பல நடிகர்கள் இப்போது அந்த வீட்டை புதுப்பித்து நவீனமயமாக்கி பலவிதமான வசதிகளுடன் அரண்மனை போல மாற்றிக்கொண்டு அதில் சொகுசாக வாழ்ந்து வருகின்றனர்.

இப்போதும் கூட சில முன்னணி நட்சத்திர நடிகர்கள் 100 கோடி ரூபாய் 200 கோடி ரூபாய் மதிப்பில் பலவிதமான வசதிகளுடன் புதிய பங்களாகளை கட்டி வாழ்ந்து வருகின்றனர். நடிகர்கள் ரஜினி விஜய் சரத்குமார் தனுஷ் போன்றவர்களின் வீடுகள் பல நூறு கோடி ரூபாய் மதிப்பு என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் அந்த காலத்திலேயே நடிகர் திலகம் சிவாஜி வீடு அன்னை இல்லம் பெரிய அளவில் பேசப்பட்டது. அரண்மனை போன்ற அந்த வீட்டில் நிறைய படங்களின் ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. அன்னை இல்லம் என்று அந்த வீட்டுக்கு பெயர் வைத்து தனது அண்ணன் தம்பிகள் மகன்கள் பேரன் பேத்திகள் என கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து மறைந்தவர் சிவாஜி கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் லலித்குமார் பேலஸ் போல இருக்கும். கீழே 16 அறைகள் இருக்கும், மேலே 16 அறைகள் இருக்கும். மொத்தமாக 25 கிரவுண்டு உள்ள வீடு அது. அன்றைய காலத்தில் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு அந்த வீட்டை சிவாஜி கணேசன் வாங்கி இருக்கிறார். அதற்கு முன்பு மெட்ராஸ் கவர்னராக இருந்த வெங்கடராம ரெட்டி என்பவர் அந்த வீட்டில் வாழ்ந்து வந்தார்.

- Advertisement -

அதற்குமுன்பு போக் என்ற பிரிட்டிஷ் கவர்னர் அந்த வீட்டில் வாழ்ந்துள்ளார். அதனால்தான் அன்னை இல்லம் உள்ள அந்த ரோட்டுக்கு போக் ரோடு என்றும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இப்படி பிரபலமானவர்கள் வாழ்ந்த வீட்டைதான் சிவாஜி கணேசன் விலைக்கு வாங்கினார். இந்த வீட்டை வாங்கிய நேரம் சிவாஜியின் தம்பி அப்போதுதான் லண்டனிலிருந்து வந்திருந்தார்.

தன்னுடைய அண்ணன் குடியிருக்கும் வீடு ராஜ கம்பீரமாக இருக்க வேண்டும் என்று பல லட்சம் ரூபாய் மதிப்பில் தேக்கு மரங்களை வாங்கி தனி படிக்கட்டுகளை செய்தார். அந்த படிக்கட்டில் சிவாஜி இறங்கி வந்தாலே சிறப்பான சத்தம் கேட்கும். அதேபோல அன்றைய தினம் எந்த கேரக்டரில் நடிக்க போகிறாரோ, அதற்குரிய நடையில்தான் படிக்கட்டில் சத்தம் கேட்கும். அதாவது வீட்டிலேயே அந்த கேரக்டருக்கான நடையை அவர் நடக்க ஆரம்பித்துவிடுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்