- Advertisement -
Homeபொழுதுபோக்குகன்னட மொழி படங்களில் நடிக்க மறுக்கிறாரா நடிகை ராஷ்மிகா மந்தனா…? - இந்த குற்றச்சாட்டுக்கு குபேரா...

கன்னட மொழி படங்களில் நடிக்க மறுக்கிறாரா நடிகை ராஷ்மிகா மந்தனா…? – இந்த குற்றச்சாட்டுக்கு குபேரா பட விழாவில் அவர் தந்த அதிரடியான பதில்!

- Advertisement -

இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் நேஷனல் க்ரஷ் என அழைக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் அறிமுகமான அவர் தொடர்ந்து கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து தமிழ் தெலுங்கு இந்தி என பல படங்களில் அவர் நடித்தார்.

தமிழில் நடிகர் விஜயுடன் வாரிசு மற்றும் கார்த்தியுடன் சுல்தான் ஆகிய படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்தார். இந்த 2 படங்களுமே சரியாக போகவில்லை. இதற்கிடையே அல்லு அர்ஜூனுடன் ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் நடித்து பான் இந்தியா படமாக பிளாக் பஸ்டர் வெற்றியை புஷ்பா படம் பெற்றது. இந்திய அளவில் ரசிகர்ளை அவர் கவர்ந்தார்.

- Advertisement -

இதையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் எதுவுமே வரவில்லை. இடையில் இந்திக்கு சென்ற ராஷ்மிகா அங்கு அனிமல் என்ற படத்தில் நடித்தார். இதில் படுக்கையறை காட்சிகளிலும் முத்தக் காட்சிகளிலும் அவர் தாராளமாக நடித்து ரசிகர்களை தன்வசப்படுத்தினார். அடுத்து வெளியான புஷ்பா 2 படமும் 1800 கோடி ரூபாய் வசூலை குவித்தது.

ஆரம்பத்தில் கன்னட மொழி படத்தில் நடித்து சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அவரது பூர்வீகம் கன்னட மொழி என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் கன்னட மொழி படங்களில் ராஷ்மிகா மந்தனா நடிப்பது இல்லை என்ற சர்ச்சையும் நீண்ட நாட்களாக உள்ளது. தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் அதிக கவனம் செலுத்தி தொடர்ந்து அந்த மொழி படங்களில் அவர் நடித்து வருகிறார் என்றும் ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது.

- Advertisement -

இந்நிலையில் அவர் நாயகியாக நடித்துள்ள குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா பங்கேற்றார். அந்த விழாவில் அவர் பேசியதாவது, இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி என்கிற பேதம் பார்த்து நான் படங்களில் நடிப்பது இல்லை. நல்ல கதைகள் தமிழில் இருந்து வந்தால் ஓடோடி இங்கே வந்து விடுவேன்.

பான் இந்தியா படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்கிற சிந்தனையும் எனக்கு இல்லை. நல்ல கதைகள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த படங்களில் நடிக்க மட்டுமே ஆவலுடன் இருக்கிறேன் என்று ராஷ்மிகா மந்தனா அந்த விழாவில் பேசியிருக்கிறார். இதன்மூலம் கன்னட மொழியில் தனக்கு பிடித்தமான படங்கள் கதைகள் கேரக்டர்கள் வந்தால் நடிப்பேன் என்பதை அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்