- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் டைட்டில்களை புறக்கணிக்க தயாரான தமிழ் சினிமா… தமிழ் இனி மெல்ல சாகுமா? - கமல்...

தமிழ் டைட்டில்களை புறக்கணிக்க தயாரான தமிழ் சினிமா… தமிழ் இனி மெல்ல சாகுமா? – கமல் வைரமுத்து செந்தமிழன் சீமான் போன்றோர் இனியும் வேடிக்கை தான் பார்ப்பார்களா?

- Advertisement -

சமீபத்தில்தான் நடிகர் கமல்ஹாசன், தமிழ் மொழியின் பெருமையை பேச நினைத்து தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னட மொழி என்று பேசி சர்ச்சையில் சிக்கினார். அதுதான் உண்மை என்று மொழி அறிஞர்களும், சில அரசியல் தலைவர்களும் கமலுக்கு ஆதரவு தந்த நிலையிலும், கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு தெரிவித்து தக்லைஃப் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்து விட்டனர்.

தமிழை பழித்தவனை என் தாய் தடுத்தாலும் விடமாட்டேன் என்று பொங்கினார் ஒரு புரட்சிக் கவிஞர். ஆனால் தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் தமிழ் தலைப்புகள் மறுக்கப்பட்டு ஆங்கில தலைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கமல் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படத்துக்கு தக்லைஃப் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதுவரை நடிகர் அஜீத்குமார் நடித்த படங்களின் பெயர்கள் வீரம் விவேகம் விஸ்வாசம் வேதாளம் விடாமுயற்சி என தூய தமிழ் பெயர்களாக இருந்த நிலையில் இப்போது கடைசியாக அவரது நடிப்பில் வெளியா படத்தின் பெயர் குட் பேட் அக்லி. அதே போல் விஜய் நடிப்பில் கடந்தாண்டில் வெளியான படத்தின் பெயர் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். சுருக்கமாக தி கோட் என அழைக்கப்பட்டது.

சமீபத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்ற படத்தின் பெயர் டூரிஸ்ட் பேமிலி. சந்தானம் நடிப்பில் வெளியான படத்தின் பெயர் டிடி நெக்ஸ்ட் லெவல். சுந்தா் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படத்தின் பெயர் கேங்கர்ஸ். அடுத்து அக்யூஸ்ட் என்ற பெயரில் ஒரு படம் வெளியாக இருக்கிறது. அதே போல் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் டிடி ரிடர்ன்ஸ் என்ற படங்கள் வெளியாகி இருக்கின்றன.

- Advertisement -

தமிழ் சினிமாவில் நல்ல கதைக்குதான் பஞ்சம் என்றால் டைட்டிலுக்கும் கடும் பஞ்சம் நிலவுகிறது. இதில் சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோ நடிக்கும் படங்கள் பழைய பட டைட்டில்களை காப்பியடித்தே வைக்கப்படுகின்றன. இதுவரை 23 படங்களில் அவர் நடித்த நிலையில் இதில் 8 படங்களின் பெயர்கள் பழைய படங்களின் டைட்டில்களாக இருக்கின்றன.

இப்படி தமிழ் சினிமாவில் ஆங்கில டைட்டில் அதிகரிக்க காரணம், ஓடிடி தளங்களில் அந்த படங்களை விற்க டிஜிட்டல் ரைட்ஸ் அதிக விலைக்கு போக ஆங்கில டைட்டில்தான் வேண்டும் என ஓடிடி நிறுவனங்கள் கூறுகின்றன. இதை சமீபத்தில் நடிகர் சசிக்குமாரே, டூரிஸ்ட் பேமிலி என டைட்டில் வைக்க அதுதான் காரணம் என பகிரங்கமாக ஒத்துக்கொண்டு இருந்தார். இனி வியாபாரத்துக்காக தமிழ் சினிமா தமிழ் டைட்டில்களை ஒழித்துவிட்டு மறுவேலை பார்க்கும் என்பதில் சந்தேகமில்லை. தமிழ் சினிமாவில் இனி தமிழ் மெல்ல சாவதை நடிகர் கமல் கவிஞர் வைரமுத்து நாம் தமிழர் கட்சி சீமான் போன்றவர்கள் வேடிக்கைதான் இனி பார்ப்பார்களா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்