தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். நடிகர் பாடகர் இயக்குனர் நடன இயக்குனர் கதை வசனகர்த்தா கவிஞர் எழுத்தாளர் என பல அடையாளங்களை கொண்டவர். மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார். கடந்த பல ஆண்டுகளாக சொந்தமாக படங்களை தயாரிக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதியை தயாரிப்பில் செலவிட்டு வருவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. தனது ஆத்ம திருப்திக்காக ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதற்காக வித்யாசமான கதைக்களங்களில் உருவான படங்களை தயாரித்து பலத்த நஷ்டங்களை சந்தித்தவர் கமல்ஹாசன்.
இதில் கமல் அவர் நடிக்கும் படங்களை மட்டுமின்றி மற்ற ஹீரோக்கள் நடிக்கும் படங்களையும் தயாரித்து இருக்கிறார். வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் என்ற மனநிலையில் படங்கள் தயாரிப்பில் லாபம் நஷ்டம் என்பதை பாவிக்கும் கமல் பல வெற்றிப் படங்களை பல தோல்வி படங்களை தனது சொந்த செலவில் தயாரித்தவர்.
இந்நிலையில் கடந்தாண்டில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையாக உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. உலகம் முழுவதும் ரூ. 325 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. சிவகார்த்திகேயன் சாய்பல்லவிக்கு இந்த படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இதையடுத்து நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஒரு புதிய படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்க கமிட் ஆகியுள்ளார். இவர் சேதுபதி பண்ணையாரும் பத்மினியும் சித்தா வீரதீர சூரன் 2 ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிக சிறந்த இயக்குனராக ரசிகர்களால் பாராட்டுகளை பெற்றவர்.
விக்ரம் துஷாரா விஜயன் நடித்த வீர தீர சூரன் 2 படத்தை தொடர்ந்து, வீர தீர சூரன் முதல் பாகத்தை அருண்குமார் இயக்க உள்ளார். இதற்கிடையே கமல்ஹாசனின் சொந்த நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை அருண்குமார் டைரக்ட் செய்ய உள்ளார். நாயகன் நாயகி இசையமைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளது.





