- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயகாந்த் இருந்திருந்தால் 2026 அரசியல் களம் வேறு மாதிரி இருந்திருக்கும்… நான் எப்போதோ அரசியல்வாதி ஆகிவிட்டேன்...

விஜயகாந்த் இருந்திருந்தால் 2026 அரசியல் களம் வேறு மாதிரி இருந்திருக்கும்… நான் எப்போதோ அரசியல்வாதி ஆகிவிட்டேன் – நடிகர் விஷால் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். நடிகர் விஷால் நடிக்கும் 35வது படத்துக்கு மகுடம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மகுடம் திரைப்படத்தின் படப்பிடிப்பு உதகை அருகே இப்போது நடந்து வருகிறது.

இந்நிலையில் மகுடம் படப்பிடிப்பு தளத்தில், மறைந்த நடிகர் விஜயகாந்தின் பிறந்த நாளை ஒட்டி அவரது படத்திற்கு நடிகர் விஷால் பூக்களை தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் படப்பிடிப்பு தளத்துக்கு வந்த அனைவருக்கும் தனது கையால் மதிய உணவை பரிமாறினார். பிறகு செய்தியாளர்களை நடிகர் விஷால் சந்தித்து பேசினார்.

- Advertisement -

அப்போது நடிகர் விஷால் கூறியதாவது, கேப்டன் விஜயகாந்த் மறக்க முடியாத ஒரு நல்ல மனிதர். நடிகர் அரசியல்வாதி என அவர் எந்தத் துறைக்கு சென்றாலும் முன்னுதாரணமாக இருந்தவர். நாம் இப்போது சினிமா சூட்டிங் ஸ்பாட்டில் சாப்பிட முக்கிய காரணம் விஜயகாந்த் தான். அவர் நான் சாப்பிடுவதையே அனைவரும் சாப்பிட வேண்டும் என்பார். பசியோடு வந்தவர்களை பசியாற வைத்துதான் அனுப்புவார்.

அதுதான் எனக்கு தூண்டுதலாக இருந்தது. விஜயகாந்த் வழியில் உணவு அளிக்க வேண்டும் என்பது என் ஆசை. இன்று விஜயகாந்த் இல்லை என்றாலும் கொண்டாடக்கூடிய மனிதராக உள்ளார். இன்றைய அரசியலில் விஜயகாந்த் இருந்திருந்தால் 2026 அரசியல் களம் வேறு மாதிரி இருந்திருக்கும். நடிகர் சங்க கட்டிடம் கட்ட வேண்டும் என்ற விஜயகாந்தின் கனவு. இன்னும் இரண்டு மாதங்களில் பணிகள் முடிவடைந்து அது நனவாகும்.

- Advertisement -

நடிகர் சங்க கட்டிடம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதத்தில் திறப்பு விழாவிற்கு தயாராகிவிடும். சினிமாவை பொருத்தவரை ஜிஎஸ்டி வரிக்குறைப்பு குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். சூதாட்டத்திற்கும் சினிமாவுக்கும் ஒரே மாதிரி வரி விதிப்பதில் மாற்றம் கொண்டு வர வேண்டும். தற்போது தமிழக அரசு 5 கோடி செலவில் திறந்து வைத்துள்ள படப்பிடிப்பு தளம் வரவேற்கத்தக்கது.

விஜய் அரசியலுக்கு வந்து 2வது மாநாட்டை கோலாகலமாக நடத்தியதற்கு வாழ்த்துகள். புதிதாக அரசியலுக்கு வருவோரை வாழ்த்த வேண்டும். சமூக சேவை செய்ய மற்றொரு கட்சி வருகிறது. வரும் 2026 ஆண்டு தேர்தலில் நிறைவேற்றப்படாமல் உள்ள பல்வேறு திட்டங்களை வாக்குறுதியாக கொடுத்து செயல்படுத்தினால் மகிழ்ச்சியாக இருக்கும். நல்லது செய்வதுதான் அரசியல் என்றால் நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்து விட்டேன். நடிகர் சங்க கட்டிடம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. செப்டம்பர் மாதத்தில் திறப்பு விழா நடத்தப்படும் என்று நடிகர் விஷால் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்