- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினியிடம் இருக்கும் அந்த கெட்டிக்காரத்தனம்… சினிமாவில் மேதாவியான கமலிடம் இல்லாமல் போய்விட்டதே? - புலம்பும் தமிழ்...

ரஜினியிடம் இருக்கும் அந்த கெட்டிக்காரத்தனம்… சினிமாவில் மேதாவியான கமலிடம் இல்லாமல் போய்விட்டதே? – புலம்பும் தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

அந்த காலத்தில் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் எப்படி இருந்தார்களோ அதுபோன்ற ஒரு நிலையில்தான் இப்போது ரஜினியும் கமலும் இருந்து வருகின்றனர். அதாவது சிவாஜி கணேசன் உயிரை கொடுத்து வித்யாசமான கேரக்டர்களில் நடிப்பார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாது. எம்ஜிஆர் ஒரு சாதாரண கதையில் ஹீரோயிசம் காட்டி அலட்டிக்காமல் நடித்திருப்பார். அது மாபெரும் வெற்றிப் படமாக இருக்கும்.

அது போல கமல்ஹாசன் இந்தியன் 2 தக்லைஃப் என படாதபாடு பட்டு நடிக்கும் படங்கள் மிக எளிதாக தோல்வி படங்களாகி விடும். ஆனால் ரஜினிகாந்த் கபாலி பேட்ட வேட்டையன் என அலட்டிக்காமல் நடித்து ஜெயித்துக்கொண்டு போய் விடுவார். இது பல படங்களில் ரஜினிக்கும் கமலுக்கும் இப்படி வெற்றி தோல்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

கமல் எப்போதுமே நடிப்புக்கு தீனி தரும் வித்யாசமான கேரக்டர்களை தேர்வு செய்து வித்யாசமான கதைக்களங்களில் நடிப்பார். ஆனால் ரஜினியை பொருத்த வரை ரசிகர்களுக்கு என்ன ஹீரோயிசம் தேவையோ அதை கதைக்களமாக்கி நடித்து கமர்ஷியலாக வெற்றிக்கு தேவையானதை செய்து ஜெயித்து விடுவார். அதனால் ரஜினி ரிஸ்க் எடுக்காமல் ரஸ்க் சாப்பிட்டு விடுவார். கமல்தான் தொடர்ந்து வெற்றிக்காக போராடிக் கொண்டே இருப்பார்.

இந்நிலையில் தக்லைஃப் படத்தில் கமல்ஹாசனின் கேரக்டர் மிகவும் கடுமையான விமர்சனத்தில் சிக்கி உள்ளது. 70 வயதான ஒரு மூத்த கலைஞன், திரிஷா போன்ற ஒரு தோழி கேரக்டருடன் இப்படி நெருக்கமான காட்சிகளில் நடிக்கலாமா, அதுவும் மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவர், வருங்கால ராஜ்யசபா எம்பி என்ற தகுதிகளை எல்லாம் கமல் மறந்து விட்டாரா என்றும் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

பெண் நடிகைகளுடன் பலமுறை கிசுகிசுக்களில் சிக்கியவர்தான் நடிகர் கமல். குறிப்பாக நடிகை கௌதமியுடன் பல ஆண்டுகள் தாலி கட்டாமல் குடும்பம் நடத்தினார். அபிராமி ஆண்ட்ரியா சிம்ரன் பூஜாகுமார் என சில நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டார். மேலும் ஏற்கனவே வாணி கணபதி, சரிகா என 2 பேரை திருமணம் செய்து விவாகரத்தும் செய்தவர் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ரஜினிகாந்தை பொருத்த வரை தனது இமேஜில் மிகவும் தெளிவாக இருப்பார். குறிப்பாக சினிமாவில் நடிப்பதோடு நடிகைகளுடன் தனது தொடர்பை துண்டித்து விடுவார். பல ஆண்டுகளாகவே நெருக்கமான முகம் சுளிக்கும்படியான காதல் காட்சிகளில் நாயகிகளுடன் ரஜினி நடிப்பது இல்லை. இந்த கெட்டிக்காரத்தனத்தால் தான் ரஜினியை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். தனது படங்களில் கமல் நடிகைகளுடன் அதிக நெருக்கம் காட்டுவதால் கடும் விமர்சனங்களில் சிக்குவது தொடர்கிறது.

சற்று முன்