- Advertisement -
Homeபொழுதுபோக்குபென்ஸ் படத்தில் லப்பர் பந்து பட நாயகனும் நடிக்கிறாரா? அப்போ அந்த படத்துல உண்மையான ஹீரோ...

பென்ஸ் படத்தில் லப்பர் பந்து பட நாயகனும் நடிக்கிறாரா? அப்போ அந்த படத்துல உண்மையான ஹீரோ யார்? – குழப்பத்தில் தவிக்கும் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் பென்ஸ். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோரும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் டைரக்ட் செய்து வருகிறார்.

இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இதுபற்றிய தகவல்களும் புகைப்படங்களும் வெளியாகி விட்டன. மேலும் இந்த படத்தில் நடிகர் மாதவனும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ராகவா லாரன்ஸ் நிவின் பாலி மற்றும் மாதவன் என 3 பேருமே ஹீரோக்கள் என்பதால் இந்த படம் மல்டி ஸ்டார் ஹீரோக்கள் படமாகி உருவாகி வருகிறது.

- Advertisement -

இந்த சூழலில் தற்போது இந்த படத்தில் பார்க்கிங் லப்பர் பந்து ஆகிய மாஸ் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் ஹரீஷ் கல்யாணும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போது பென்ஸ் படத்தில் நடிக்கும் ஹீரோக்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை தந்துள்ளது.

அதுமட்டுமின்றி இந்த படத்தின் பட்ஜெட் ஆரம்பத்தில் இருந்ததற்கும் இப்போதும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் ஆரம்பத்தில் ராகவா லாரன்ஸ் மட்டும்தான் இந்த படத்தில் நாயகனாக நடிப்பதாக இருந்தது. பிறகு நிவின் பாலி மாதவன் இப்போது ஹரீஷ் கல்யாண் என மல்ட்டி ஸ்டார் படமாக மாறியதால் பட்ஜெட்டம் எகிறியுள்ளது. இதில் ஹரீஷ் கல்யாண் இந்த படத்தில் நடிக்க காரணம் என்ன என்பதும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் நடிகர் ஹரீஷ் கல்யாண் தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்து வருகிறார். நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த சூழலில் ராகவா லாரன்ஸ் நிவின் பாலி மாதவன் போன்ற ஹீரோக்கள் படத்தில் மற்றும் ஒரு நாயகனாக அவர் நடிக்க கமிட் ஆனது ஏன் என்ற கேள்வி தமிழ் சினிமா ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

அந்தகாரம் என்ற படத்தை இயக்கிய விக்ன ராஜூ என்ற இயக்குனர் இப்போது புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். அந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ்தான் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது ஹரீஷ் கல்யாண்தான். அதனால், பேஷன் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகி வரும் பென்ஸ் படத்திலும் ஒரு கேரக்டரில் அவர் நடிக்க ஒத்துக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்