- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் படம் எடுத்து முடித்த பின்பு இருந்த நீளம் எவ்ளோ தெரியுமா? இயக்குனர் நெல்சன் சொன்ன...

ஜெயிலர் படம் எடுத்து முடித்த பின்பு இருந்த நீளம் எவ்ளோ தெரியுமா? இயக்குனர் நெல்சன் சொன்ன தகவலை கேட்டு வாய் பிளந்த ரசிகர்கள்!

- Advertisement -

கோலமாவு கோகிலா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக நுழைந்தவர் நெல்சன் திலீப்குமார். கதையின் நாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தை நெல்சன் இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.

இதையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் பூஜா ஹெக்டே நடித்த பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கினார். இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் வசூல் ரீதியாக இந்த படம் வெற்றி பெற்றது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கினார்.

- Advertisement -

கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் பிளாக்பஸ்டர் மூவியாக வெற்றி பெற்றது. உலகளவில் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இப்போது ஜெயிலர் 2 படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். சென்னை கேரளா ஐதராபாத் என ஜெயிலர் 2 படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதற்கிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கூறியதாவது, முதலில் நயன்தாரா பிறகு சிவகார்த்திகேயன் அப்புறம் விஜய் இப்போது ரஜினி என 4 படங்களில் முன்னணி நட்சத்திர கலைஞர்களை வைத்து படம் இயக்கினேன் என்பதை மற்றவர்கள் சொல்லும் போது அது எனக்கு தெரிகிறது. அதை நான் திட்டமிட்டு செய்யவில்லை. தானாகவே அப்படி நடந்து விட்டது.

- Advertisement -

பொதுவாக ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் ஜாலியாக இருப்பேன். காரணம் ஷூட்டிங் போவதற்கு முன்பே பக்காவாக பேப்பர் ஒர்க் செய்து கொண்டு போவேன். ஸ்கிரிப்ட் ரெடி பண்ணாமல் நான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே போக மாட்டேன். அதே நேரத்தில் பேப்பர் ஒர்க் செய்யும் நேரங்களில்தான் நான் ரொம்பவும் டென்சனாக இருப்பேன்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் லாங் ஷாட் காட்சிகளை பார்க்கும் போது மட்டுமே மானிட்டர் பார்ப்பேன். மத்தபடி கேமரா வழியாகதான் மற்ற காட்சிகளை பாா்த்து படமாக்குவேன். ஜெயிலர் படம் நான் எடுத்து முடித்த போது படத்தின் நீளம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் இருந்தது. பிறகு டப்பிங் போகும் போது 2 மணி நேரம் 45 நிமிடமாக குறைத்து விட்டேன். 30 நிமிடம் படம் இல்லை. இதில் எனக்கு பிடித்தமான சில காட்சிகளும் நீக்கப்பட்டன. இருந்தாலும் வேறு வழியில்லை என்று நெல்சன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்