- Advertisement -
Homeபொழுதுபோக்கு3 மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடும் தனுஷின் குபேரா படம்… தியேட்டர் உரிமையாளர்கள் வைத்த...

3 மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடும் தனுஷின் குபேரா படம்… தியேட்டர் உரிமையாளர்கள் வைத்த முக்கிய கோரிக்கை – அப்போ சிறப்பு காட்சியும் இல்லையா?

- Advertisement -

தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த குபேரா படம் வருகிற 20ம் தேதி ரிலீஸாக உள்ளது. தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகும் இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். முக்கிய கேரக்டரில் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவும் நடித்திருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் குபேரா படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

கடந்தாண்டில் வெளியான ராயன் படத்துக்கு பிறகு இந்த ஆண்டில் தனுஷ் நடிப்பில் வெளியாகும் முதல் படம் இதுதான். அதனால் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. தவிர இயக்குனர் சேகர் கம்முலா தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களை தந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்போது குபேரா படத்தை திரையிடுவதில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. குபேரா படத்தின் மொத்த நீளம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருக்கிறது. அதாவது ஒரு காட்சியை திரையிட்டு முடித்து அடுத்த காட்சியை தொடங்கவே 4 மணி நேரத்துக்கு மேலாகி விடும்.

வருகிற 20ம் தேதி குபேரா படம் ரிலீஸாகிற நிலையில், அந்த ஒரு நாளில் சிறப்பு காட்சியுடன் 5 காட்சிகளை திரையிட முடியாது. ஏனெனில் காலை 9 மணிக்கு துவங்கி இரவு 1.30 மணிக்குள் 5 காட்சிகளை முடிப்பது சிரமம். ஏனெனில் ஒரு காட்சிக்கும் மறுகாட்சிக்கும் இடையில் தியேட்டர் அரங்கம் தூய்மை, பார்க்கிங் வாகனங்கள் வெளியேற்றம் என கூடுதல் நேரம் தேவைப்படும். அத்துடன் இடைவேளையில் கேண்டீன் வியாபாரத்தும் 15 முதல் 20 நிமிடங்கள் ரசிகர்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும்.

- Advertisement -

அதுமட்டுமின்றி வழக்கமாக மற்ற படங்கள் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் இருக்கும் போது குபேரா படம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் என்றால் ஒரு காட்சிக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக ஆகிறது. இதனால் மின்கட்டணம் வழக்கமான காட்சிகளை விட பலமடங்கு எகிறும். மின்விசிறிகள் ஏஸி மின்விளக்குகள் என அதிக மின்சாரம் செலவாகும்.

ஆனால் இயக்குனர் சேகர் கம்முலா பிடிவாதக்காரர் என்பதால் குபேரா படத்தின் நீளத்தை குறைக்க முடியாது என்று உறுதியாகி கூறிவிட்டார் என்கின்றனர். அதனால் மின்கட்டணம் அதிகரிப்பு, ஒரு காட்சி இழப்பு ஆகியவை காரணமாக, குபேரா படத்துக்கு மட்டும் தியேட்டர் உரிமையாளர்கள் 5 சதவீதம் அதிகமாக தங்களுக்கு ஷேர் தர வேண்டும் என்று வினியோகஸ்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்