தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். அவர் நடித்துள்ள ஜனநாயகன் படம் வருகிற 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளது. நேற்று விஜயின் பிறந்த நாள் என்பதால் ஜனநாயகன் படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் ஒன்று வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.
நடிகர் விஜயின் 51வது பிறந்த தினமான நேற்று அவரது திரையுலக நண்பர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து இருந்தனர். இதில் நடிகை திரிஷாவும் தனது வலைதள பக்கத்தில் விஜய் தனது செல்ல நாய்க்குட்டியை கொஞ்சி கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
அந்த புகைப்படத்தில் விஜய்க்கு அருகில் திரிஷாவும் அமர்ந்திருக்கும் நிலையில், ஹேப்பி பர்த்டே பெஸ்டஸ்ட் என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார். இந்த புகைப்படம் நேற்று விஜய் பிறந்த நாளில் எடுக்கப்பட்டது என்றும், இந்த புகைப்படம் லியோ படம் சக்சஸ் மீட்டில் எடுக்கப்பட்டது என்றும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
நடிகர் விஜய்க்கு திரிஷா தனது எக்ஸ் தளத்தில் போட்ட இந்த பதிவு மொத்தம் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 69 ஆயிரம் லைக்குகளை பெற்றுள்ளது. மேலும் 11 ஆயிரம் பேர் இந்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கமெண்டுகளும் வந்துள்ளது. இதே பதிவு இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் 9 லட்சம் லைக், 9 ஆயிரத்துக்கும் அதிகமான கமெண்டுகளும் வந்துள்ளன.
ஏற்கனவே நடிகர் விஜய், நடிகை திரிஷாவுடன் நெருக்கமான நட்பில் இருந்து வருவதாக புகார் உள்ளது. கில்லி திருப்பாச்சி ஆதி குருவி லியோ உள்ளிட்ட படங்களில் விஜய் திரிஷா நடித்த நிலையில், லியோ படத்தில் விஜய் திரிஷா உதட்டு முத்தக்காட்சியும் இடம்பெற்றது. மேலும் கோவாவில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு விஜய், திரிஷா இருவரும் ஒன்றாக தனி விமானத்தில் கோவா சென்றதும் பெரிய அளவில் வைரலானது.
நடிகர் விஜய் இப்போது அரசியல் தலைவராகவும் இருக்கிறார். 2026ம் ஆண்டில் அவர்தான் தமிழக முதல்வர் என்றும் தவெக கட்சியினர் கோஷமிட்டு வருகின்றனர். இதற்கிடையே நடிகை திரிஷாவுடன் நடிகர் விஜய் நெருக்கத்தில் இருப்பது போன்ற இதுபோன்ற விஷயங்கள், விஜய்க்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இருக்கிற பஞ்சாயத்துல திரிஷா வேற கொளுத்தி போடறாங்களே என தளபதி ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர்.





