- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி நடிப்பில் உருவான கூலி படத்தின் டைட்டில் மாற்றம்… உச்சக்கட்ட விரக்தியடைந்த சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள்...

ரஜினி நடிப்பில் உருவான கூலி படத்தின் டைட்டில் மாற்றம்… உச்சக்கட்ட விரக்தியடைந்த சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் – என்ன கொடும சார் இது?

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். உபேந்திரா நாகர்ஜூனா சௌபிர் சாஹிர் அமீர்கான் சத்யராஜ் ஸ்ருதிஹாசன் நித்யாராம் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

கூலி படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதமே முடிந்துவிட்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். சென்னை கேரளா ஐதராபாத் பகுதிகளை தொடர்ந்து அடுத்ததாக மைசூருவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. அங்கு சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்போது கூலி படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகளில் தீவிரமாக இருந்து வருகிறார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில், ரஜினி ரசிகர்கள் கூலி படம் எப்படியும் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பில், கூலி படத்தின் ரிலீஸ்க்காக காத்திருக்கின்றனர்.

இந்த சூழலில் கூலி படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாக திடீர் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் கூலி படம் வெளியாக உள்ளது. இதில் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் பி வாசு இயக்கத்தில் சரத்குமார் மீனா நடித்த படத்துக்கு கூலி என பெயர் வைத்து வெளியான நிலையில், மீண்டும் அதே பெயரில் ரஜினி நடித்த கூலி படம் வெளியாக உள்ளது.

- Advertisement -

இதே போல் இந்தியில் கடந்த 1983ம் ஆண்டில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பில் கூலி என்ற படம் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பில்தான் வயிற்றில் காயம்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து நடிகர் அமிதாப் பச்சன் மீண்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது இந்தி படவுலகில் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் கடந்த 2020ம் ஆண்டில் இந்தி நடிகர் வருண் தவான் நடித்த கூலி நம்பர் 1 என்ற பெயரிலும் ஒரு படம் வெளியானது. அதனால் இந்தியில் ஏற்கனவே கூலி என்ற பெயரில் 2 படங்கள் வெளியாகி விட்டதால், இப்போது இந்தியில் மட்டும் கூலி படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளதாகவும் அங்கு இந்தியில் மேஜாடூர் என்ற பெயரில் இந்த படம் வெளியாகும் என்றும் தெரிய வந்துள்ளது. இந்த டைட்டில் கூலி போல மாஸ் ஆக இல்லை என்று சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்