தமிழில் பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தமன்னா. அதன்பிறகு வியாபாரி படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பையா அலெக்ஸ் பாண்டியன் சுறா அயன் படிக்காதவன் வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்த தமன்னா, ஒரு கட்டத்தில் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் ஆர்வம் காட்டினார்.
தமிழ் படங்களில் நடித்த போது ஓரளவு நல்ல கேரக்டர்களை தேர்வு செய்த நடித்த நடிகை தமன்னா தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் அதிக கவர்ச்சி காட்டி நடித்தார். குறிப்பாக இந்தியில் முத்தக் காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளிலும் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்து ரசிகர்களை கிறங்கடித்தார்.
பாலிவுட் நடிகைகளே மிரளும் அளவுக்கு கவர்ச்சியான ஆடைகளில் சினிமா நிகழ்ச்சிகளிலும் தமன்னா கலந்துக்கொண்டார். இது தமிழ் படங்களில் நடித்த தமன்னா தானா என்று தமிழ் சினிமா ரசிகர்கள் ஆச்சரியம் காட்டிய நிலையில், ஜெயிலர் படத்தில் காவலய்யா பாட்டுக்கும் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை அசத்தினார்.
இந்தியில் நுழைந்த நடிகை தமன்னா லாஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற படத்தில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா என்பவருடன் நடித்தார். அந்த படத்தில் இருவரும் உதட்டு முத்தக்காட்சிகளிலும், படுக்கையறை காட்சிகளிலும் நெருக்கமாக நடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்ட நிலையில் காதல் ஏற்பட்டது.
அதனால் இருவரும் அடிக்கடி இரவு நேரங்களில் டேட்டிங் செல்வது அதிகரித்தது. சினிமா விழாக்களுக்கும் ஒன்றாகவே கை கோா்த்தபடி வந்தனர். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இந்த காதல் முறிந்து போனதாக சில வாரங்களுக்கு முன் தகவல் பரவியது. இருவரும் தனித்தனியாக விழாக்களில் பங்கேற்றனர்.
இந்நிலையில் தமன்னை கழட்டி விட்ட நடிகர் விஜய் வர்மாவுக்கு புதிய காதல் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தங்கல் என்ற படத்தில் நடித்த பாத்திமா சனா கானை, நடிகர் விஜய் வர்மா காதலிப்பதாகவும், இருவரும் மனிஷ் மல்கோத்ரா இயக்கத்தில் உல் ஜலூல் இஸ்க் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளனர். பல்வேறு இடங்களில் இருவரும் ஒன்றாக சேர்ந்து சுற்றி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் என்ன இருந்தாலும் நடிகை தமன்னா போல வருமா பாஸ் என்று விஜய் வர்மாவிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்





