- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் லாயர் படம்… இதில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை...

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் லாயர் படம்… இதில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை – படக்குழுவுக்கு இப்படி ஒரு கண்டிஷன் போட்டாரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி முன்னணி நடிகராக மாறியிருப்பவர் விஜய் ஆண்டனி. அவர் நடிக்கும் படங்களுக்கு அவரே இசையமைத்தும் வருகிறார். அத்துடன் தயாரிப்பாளர் இயக்குனர் படத்தின் எடிட்டர் என்று பல விஷயங்களில் விஜய் ஆண்டனி சினிமாவில் தனது திறமையை காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதுதவிர ரசிகர்களின் விருப்பத்துக்காக இசை கச்சேரிகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் மற்ற நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த விஜய் ஆண்டனி, ஹீரோவாக மாறிய பிறகு தனது படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார். இப்போது மற்ற ஹீரோக்கள் நடிக்கும் மற்ற படங்களுக்கும் இசையமைக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இன்று விஜய் ஆண்டனி தயாரிப்பில் அவரே ஹீரோவாக நடித்த மார்கன் என்ற படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் லியோ ஜான்பால் இந்த படத்தை இயக்கி உள்ளார். மார்கன் படத்தை அடுத்து நடிகர் விஜய் ஆண்டனி இப்போது லாயர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் லாயர் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை ரவீணா தாண்டனும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 1994ம் ஆண்டில் நடிகர் அர்ஜூன் நடித்த சாது என்ற படத்தில் இந்தி நடிகை ரவீணா தாண்டன் நாயகியாக நடித்திருந்தார். அதற்கு பின் 2001ம் ஆண்டில் நடிகர் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படத்தில், கமலுக்கு ஜோடியாக ரவீணா தாண்டன் நடித்திருந்தார். இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் விஜய் ஆண்டனி நடிக்கும் லாயர் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

- Advertisement -

லாயர் படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகை ரவீணா தாண்டன் படக்குழுவுக்கு ஒரு முக்கியமான கண்டிஷன் ஒன்றை போட்டிருக்கிறார். நீங்கள் 1 நாள் 2 நாள் என எனக்கு கால்ஷீட் போடாதீர்கள். மொத்தமாக 10 நாட்கள் 15 நாட்கள் என கால்ஷீட் போடுங்கள். இல்லை என்றால் நான் மும்பையில் இருந்து இங்கு வரவும் ஓட்டலில் தங்கவும் போக்குவரத்து செலவு, எக்ஸ்பென்சிவ் செலவுகள் அதிகமாகும்.

அப்படி வீண் செலவு செய்யாமல் தவிர்க்கவே மொத்தமாக 10 நாட்கள் 15 நாட்கள் என கால்ஷீட் போட்டு விடுங்கள் என்று ரவீணா தாண்டன் கூறியிருக்கிறார். இப்போது அவர் சொன்ன அந்த ஐடியாவை பின்பற்றிதான், லாயர் படக்குழு ஷெட்யூல் போட்டு படப்பிடிப்பை நடத்தி கொண்டிருப்பதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்