- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரண்ட்ஸ், காவலன் திரைப்பட இயக்குனர் சித்திக் மாரடைப்பால் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி, சோகத்தில் திரையுலகம்

பிரண்ட்ஸ், காவலன் திரைப்பட இயக்குனர் சித்திக் மாரடைப்பால் திடீர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி, சோகத்தில் திரையுலகம்

- Advertisement -

மலையாளத்தில் மிகப் பிரபலமான இயக்குனர்களின் முக்கியமானவர் சித்திக். கேரள மாநிலம் கொச்சினை சேர்ந்த இவர், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று 1980களில் அந்தத் துறையில் நுழைந்தார். பணியில் அவர் காட்டிய ஈடுபாட்டின் மூலம் 1986 ஆம் ஆண்டு பாப்பன் பிரியபேட்ட பாப்பன் படத்திற்கு கதை எழுதும் வாய்ப்பு கிடைத்தது.

இதன்பிறகு சிறிது காலம் கதாசிரியராக வலம் வந்த சித்திக், 1989 ஆம் ஆண்டு வெளியான ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். பின்னர், காட்பாதர், வியட்நாம் காலனி, ஹிட்லர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்றார்.

- Advertisement -

மலையாள இயக்குனர் சித்திக், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஃப்ரெண்ட்ஸ் திரைப்படம் இவர் இயக்கியதுதான். இதில் வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரத்தை இன்று வரை கொண்டாடப்படுவதற்கு காரணம் இயக்குனர் சித்திக்கின் காட்சி அமைப்புகளே.

நகைச்சுவைக்கு எப்போதும் முக்கியத்துவம் தரும் சித்திக், பிரண்ட்ஸ் திரைப்படத்தில் காமெடி அரட்டை நடத்திருப்பார். இதைத் தொடர்ந்து தமிழில், விஜயகாந்த், பிரபுதேவா, வடிவேலு ஆகியோர் நடித்த எங்கள் அண்ணா திரைப்படத்தை இயக்கினார். அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டாலும், வடிவேலுவின் காமெடி படத்தில் தூக்கலாக இருக்கும்.

- Advertisement -

தொடர்ந்து நடிகர் பிரசன்னாவை வைத்து சாதுமிரண்டா என்ற படத்தையும் அவர் இயக்கினார். இதன் பிறகு அவர் மலையாளத்தில் இயக்கிய பாடிகார்ட் திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை தமிழில் காவலன் என்னும் பெயரில் ரீமேக் செய்த சித்திக், அதில் ஹீரோவாக விஜய்யை நடிக்க வைத்தார். மாறுபட்ட கதைகளத்தில் நடித்த விஜய்க்கு இந்த படம் நல்ல பெயரை வாங்கி கொடுக்க, வடிவேலுவின் காமெடியும் வேற லெவலில் இருந்தது.

கடைசியாக அவர் இயக்கத்தில் பிக் பிரதர் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. 63 வயதான சித்திக் நிம்மோனியா மற்றும் கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் கொச்சினில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சித்திக் நேற்று காலமானார். அவரின் மறைவிற்கு மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்