- Advertisement -
Homeபொழுதுபோக்கு20 கோடி ரூபாய் செலவில் விஜய்க்கு டீ ஏஜிங் தேவைதானா? - எம்ஜிஆர் நம்பியார், தனுஷ்...

20 கோடி ரூபாய் செலவில் விஜய்க்கு டீ ஏஜிங் தேவைதானா? – எம்ஜிஆர் நம்பியார், தனுஷ் சிவகார்த்திகேயனுக்கு டீ ஏஜிங் செய்ய செலவானது இவ்ளோதான் – வெங்கட்பிரபுவை பங்கமாக கலாய்த்த பிரபலம்!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் நேற்று ரிலீஸானது. இந்த படத்தில் அப்பா மகன் என்ற இரட்டை வேடங்களில் விஜய் நடித்துள்ளார். இதில் மகன் விஜயை 23 வயது இளைஞனாக காட்ட டீ ஏஜிங் என்ற தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி உள்ளார் இயக்குனர் வெங்கட்பிரபு.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்பெஷல் ஸ்டுடியோவில் இந்த டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 49 வயதான விஜயை, 23 வயது இளைஞன் போல் தி கோட் படத்தில் வெங்கட்பிரபு காட்டியிருக்கிறார். இதற்காக 2 வாரம் அந்த ஸ்டுடியோவில் இருந்து நடித்துக் கொடுத்தார் விஜய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுகுறித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் சில பதிவுகளை போட்டு தி கோட் பட இயக்குனர் வெங்கட்பிரபுவை பங்கமாய் கலாய்த்து இருக்கிறார். எந்த டெக்னாலஜியையும் பயன்படுத்தாமல் அசத்தலாக டீ ஏஜிங் செய்வதில் வல்லவர்கள் நம் சினிமா முன்னோடிகள்.

நீதிக்கு தலைவணங்கு படம் 1976ல் வெளிவந்த போது எம்ஜிஆர் வயது 59. நம்பியார் வயது 57. படத்தில் இருவரும் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ். கார் ரேஸ்தான் இவர்களது இன்ட்ரோ சீன்தான் டீ ஏஜிங் செய்ய தேவைப்பட்ட பொருள் – ஆளுக்கு ஒரு விக் என்று கூறி அந்த காட்சியை காட்டும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அதே போல் கடந்த 2012ம் ஆண்டில் த்ரீ படம் வந்த போது தனுஷ் வயது 29, எஸ்கே வயது 27. படத்தில் இருவரும் ஸ்கூல் ஸ்டூடன்ட்ஸ். டீ ஏஜிங் செய்ய தேவைப்பட்ட பொருள் – ஷேவிங் பிளேடு மட்டும்தான் என்று அதில் ப்ளு சட்டை மாறன் பதிவிட்டு, டியூசன் சென்டரில் தனுஷ், சிவகார்த்திகேயன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

இப்படி விக்கை வைத்து எம்ஜிஆர் நம்பியாரை கல்லூரி மாணவர்களாக காட்டியிருந்தனர். ஒரு பிளேடு மூலம் தாடி, மீசையை ஷேவிங் செய்து அகற்றிவிட்டு தனுஷ், சிவகார்த்திகேயனை பள்ளி மாணவர்களாக காட்டியிருந்தனர் நம் சினிமா முன்னோடிகள். ஆனால் தேவையே இல்லாமல் பல கோடிகள் ரூபாய் செலவு செய்து விஜய்க்கு தி கோட் படத்தில் டீ ஏஜிங் செய்தது அவசியமே இல்லாத தண்டச் செலவு என்று கூறியிருக்கிறார் ப்ளு சட்டை மாறன். இது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்