- Advertisement -
Homeபொழுதுபோக்கு6 மாதங்களில் பலத்த நஷ்டத்தை சந்தித்த தமிழ் சினிமா… காலை வாரிவிட்ட பெரிய பட்ஜெட் படங்கள்...

6 மாதங்களில் பலத்த நஷ்டத்தை சந்தித்த தமிழ் சினிமா… காலை வாரிவிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் – காலரை தூக்கி விட்டு கெத்து காட்டிய சின்ன பட்ஜெட் படங்கள்!

- Advertisement -

நடப்பு ஆண்டில் 2025 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 6 மாதங்களில் தமிழ் சினிமாவின் மொத்தம் 128 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இதில் 70 சதவீதத்திற்கும் மேல் 1 கோடி ரூபாய் முதல் 3 கோடி ரூபாய் வரை சின்ன பட்ஜெட்டில் எடுத்த படங்கள் தான். இதில் சில படங்களைத் தவிர வேறு எந்த படமும் பெரிய அளவில் ஓடவில்லை.

அதே நேரத்தில் ரூ. 100 கோடிக்கு மேல் செலவு செய்த எடுக்கப்பட்ட 5 படங்களில் சில படங்கள் மட்டுமே நன்றாக ஓடியிருக்கின்றன. எனினும் கடந்த 6 மாதங்களில் பல கோடி ரூபாய் நஷ்டத்தை தமிழ் சினிமா சந்தித்திருப்பதாக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து தனஞ்செயன் கூறியதாவது, அஜீத்குமாரின் விடாமுயற்சி குட்பேட் அக்லி என இந்த 2 படங்களுமே ஓரளவு வசூலை குவித்தன. குறிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன், சசிகுமார் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி விஷால் நடித்த மதகஜ ராஜா உள்ளிட்ட படங்கள் அதிக வசூலை குவித்தன. சூர்யா நடித்த ரெட்ரோ, கமல்ஹாசன் நடித்த தக்லைஃப் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் வசூலிக்க குவிக்கவில்லை.

இதில் ஒட்டுமொத்தமாக 817 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் விடாமுயற்சி குட் பேட் அக்லி இரண்டுமே ரூ. 100 கோடிக்கு மேல் எடுக்கப்பட்ட படங்கள். இதில் விடாமுயற்சி படம் பிளாப் ஆன நிலையில் குட் பேட் அக்லி படம் மட்டுமே 250 கோடி ரூபாய் வசூலித்தது. கமல்ஹாசன் நடித்த தக்லைஃப் திரைப்படம் சூர்யாவின் ரெட்ரோ படம் தனுஷின் குபேரா படங்கள் உள்ளிட்ட ஐந்து படங்கள் ரூ. 100 கோடிக்கு மேல் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள்.

- Advertisement -

இதில் ரூ. 35 கோடி எடுக்கப்பட்ட டிராகன் படம் ரூ. 150 கோடி வசூலித்தது. ரூ. 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மதகஜ ராஜா படம் 12 ஆண்டுகள் கழித்து வெளியாகி ரூ. 50 கோடி வசூலித்தது. ரூ. 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டூரிஸ்ட் ஃபேமிலி படம் 90 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக வெளியான 128 படங்களில், 1750 கோடி ரூபாய் வரை தயாரிப்புக்கும், ரூ. 125 கோடி வரை பிரமோசனுக்கு செலவு செய்த நிலையில் 1875 கோடி ரூபாய் மொத்தமாக செலவாகி உள்ளது.

ஆனால் கடந்த 6 மாதங்களில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த மொத்த லாபம் 1625 கோடி ரூபாய் என்றும், அதிகபட்சமாக 250 கோடி ரூபாய் நஷ்டத்தை கடந்த 6 மாதங்களில் தமிழ் சினிமா சந்தித்துள்ளதாகவும் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியிருக்கிறார். அதிலும் இந்த லாபத்தில் 40 சதவீதம் ஓடிடி விற்பனை மூலமாக தான் தயாரிப்பாளர்கள் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்