- Advertisement -
Homeபொழுதுபோக்குஅர்ஜூன் நடித்த இந்த சூப்பர் ஹிட் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித்தா? என்னப்பா சொல்றீங்க

அர்ஜூன் நடித்த இந்த சூப்பர் ஹிட் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித்தா? என்னப்பா சொல்றீங்க

- Advertisement -

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “துணிவு” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஒரு அசத்தலான ஆக்சன் திரைப்படமாக இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது. “துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து தற்போது அஜித்குமார் “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க, லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இத்திரைப்படத்திற்கான டெஸ்ட் லுக்கிற்காக அஜித்குமாரும் இயக்குனர் மகிழ் திருமேனியும் வெளிநாட்டுக்கு சென்றிருந்தனர். லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்ததாக வெளிவந்த செய்தியால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என பல பத்திரிக்கையாளர்கள் கூறி வந்தனர். ஆனால் தற்போது இருவரும் டெஸ்ட் லுக்கிற்காக வெளிநாடு சென்று வந்தது ரசிகர்களுக்கு விரைவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்ற நம்பிக்கையை தந்துள்ளது.

- Advertisement -

“விடாமுயற்சி” திரைப்படத்திற்கு பிறகு அஜித்குமார் தனது பரஸ்பர மரியாதை பயணத்தை தொடங்கவுள்ளார். ஏற்கனவே இதன் முதல்கட்டமாக இந்தியா முழுவதும் சுற்றி வந்த விஜய், பூடான், நேபாள் ஆகிய நாடுகளையும் சுற்றி வந்தார். “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு வருகிற நவம்பர் மாதம் தனது உலக பைக் சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளார்.

இந்த நிலையில் அஜித்குமார் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக இருந்து பின்னாளில் அத்திரைப்படத்தில் அர்ஜூன் நடித்த ஒரு செய்தி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

கடந்த 2007 ஆம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் அர்ஜூன், நிலா, வடிவேலு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “மருதமலை” இத்திரைப்படம் வெளிவந்தபோது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இத்திரைப்படத்தில் முதலில் அஜித்குமார்தான் நடிக்கவேண்டியதாக இருந்ததாம். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை என்பதால் இதில் அர்ஜூன் நடித்தாராம்.

- Advertisement -

சற்று முன்