தமிழ் சினிமாவில் வில்லன்களாக ஆரம்பத்தில் நடித்து பிறகு ஹீரோவாக நடித்தவர்கள் ஒரு சிலர்தான். ஆனால் ஹீரோவாக நடித்த அவர்களும் ஒரு கட்டத்தில் குணச்சித்திர நடிப்புக்கு மாறியிருக்கிறார்கள். உதாரணமாக சத்யராஜ் சரத்குமார் போன்றவர்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். ஆனால் வில்லனாக நடித்து இன்றும் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் ஒருவர் மட்டும்தான்.
அபூர்வ ராகங்கள் துவங்கி இப்போது ஜெயிலர் 2 படம் வரை 172 படங்களில் நடித்துள்ள அவர் இந்த ஆண்டில் தனது 50வது பொன்விழா ஆண்டை தமிழ் சினிமாவில் கொண்டாடி வருகிறார். கடந்தாண்டில் வேட்டையன் படம் வெளியான நிலையில், அடுத்ததாக வருகிற ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் வெளியாக உள்ளது.
இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படமும் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டவில்லை. ஆனால் இந்த ஆண்டில் அந்த சாதனையை ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் முறியடிக்கும் என்று சொல்லப்படுகிறது. தமிழில் 1000 கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் என்ற பெருமை நிச்சயம் கூலி படத்துக்கு உண்டு என்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் உறுதியாக கூறி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தில் கூலி கேரக்டரில் நடித்திருக்கிறார். ஏற்கனவே அவர் தீ என்ற படத்தில் இதுபோன்ற கூலி கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் கூலியாக உழைப்பாளி என்ற படத்திலும் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். அதனால் அந்த படங்கள் எல்லாம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற படங்களாக இருந்திருக்கின்றன.
மேலும் கூலி படத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். வில்லன் கேரக்டரில் நாகர்ஜூனா நடித்திருக்கிறார். அமீர்கான் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டிருக்கிறார். இதுவரை 50 ஆண்டுகளில் பல படங்களில் பல வில்லன்களுடன் ரஜினிகாந்த் நடித்திருந்தாலும் வில்லன்கள் குறித்த ஒரு முக்கிய தகவலை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
சினிமா விழா ஒன்றில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, நான் ஒரு உண்மையை சொல்கிறேன். நான் இதுவரை நடித்த படங்களில் எனக்கு ரெண்டே வில்லன்கள்தான். எனக்கு சேலஞ்சிங் ஆக அமைந்தது. அதில் பாட்ஷா படத்தில் ஆண்டனி, படையப்பா படத்தில் நீலாம்பரி என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். அவர் குறிப்பிட்டு சொன்னவர்கள் நடிகர் ரகுவரன் நடிகை ரம்யாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.





