- Advertisement -
Homeபொழுதுபோக்குநண்பன் படத்தில் நடிக்க வேண்டியவர் சூர்யா தான்… விஜய் எப்படி ஹீரோவானார் தெரியுமா? - வெளிச்சத்துக்கு...

நண்பன் படத்தில் நடிக்க வேண்டியவர் சூர்யா தான்… விஜய் எப்படி ஹீரோவானார் தெரியுமா? – வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் பல வெற்றிப் படங்களை தந்தவர். இதில் கடந்த 2012ம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் நண்பன். இந்த படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார். நாயகியாக இலியானா நடித்திருந்தார். மேலும் விஜயின் நண்பர்களாக நடிகர்கள் ஜீவா ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்திருந்தனர். காலேஜ் பிரின்ஸ்பால் கேரக்டரில் சத்யராஜ் நடித்திருந்தார்.

மேலும் இந்த படத்தில் முக்கியமான ஒரு கேரக்டரில் நடிகர் எஸ்ஜே சூர்யாவும் நடித்திருந்தார். காமெடி நடிகர் சத்யன் இந்த படத்தில் பேசப்படும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் வரவேற்கப்பட்ட ஒரு வெற்றிப் படமாக இருந்தது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார்.

கடந்த 2009ம் ஆண்டில் இந்தியில் த்ரீ இடியட்ஸ் என்ற பெயரில் ஒரு படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. அந்த படத்தின் கதையை தழுவிதான் இந்த படம் உருவானது. இந்த படத்தில் கதாநாயகி இலியானாவின் சகோதரியாக, சிவா மனசுல சக்தி நாயகியாக நடித்த அனுயா நடித்திருந்தார். இந்த படம் ஜனரஞ்சகமாக ஒரு வெற்றிப் படமாக ஷங்கருக்கும் விஜய்க்கும் அமைந்தது.

ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சூர்யா தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நண்பன் படத்தில் விஜய் நடித்த அதே கேரக்டரில் முதலில் நாயகனாக நடிக்க நடிகர் சூர்யாவை தான் ஷங்கர் தேர்வு செய்திருந்தார். இதற்கான லுக்டெஸ்ட் எல்லாம் நடந்துள்ளது. மிக விரைவில் சூர்யா ஜீவா ஸ்ரீகாந்த் நடிப்பில் இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்க ஷங்கர் திட்டமிட்டு இருந்தார்.

அப்போது நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் இயக்குனர் ஷங்கரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ஷங்கர் ஜெண்டில் மேன் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதற்கு முன்பு வரை இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அதனால் இயக்குனர் ஷங்கருக்கு எஸ்ஏ சந்திரசேகர் குருவை போன்றவர்.

அப்போது ஷங்கரிடம் பேசிய இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், என் மகன் விஜய் நடித்த படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. குறிப்பாக சுறா வேட்டைக்காரன் போன்ற படங்கள் பிளாப் ஆகி விட்டன. அதனால் நண்பன் படத்தில் விஜயை நடிக்க வையுங்கள் என்று இயக்குனர் ஷங்கரிடம் கேட்டிருக்கிறார். தனது குருவே, இப்படி கேட்டதால் வேறு வழியின்றி சூர்யா நடிக்க வேண்டிய நண்பன் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக விஜயை, இயக்குனர் ஷங்கர் நடிக்க வைத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்