- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலிவுட் நட்சத்திர நடிகர் நானா படேகர் மறைவு - கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த விஷால் பட...

பாலிவுட் நட்சத்திர நடிகர் நானா படேகர் மறைவு – கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த விஷால் பட நடிகை!

- Advertisement -

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் தனது 75வது வயதில் நேற்று கோவாவில் காலமானார். அவரது மறைவுக்கு பாரத பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை உலக நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். மறைந்த நடிகர் நானா படேகர் 3 தேசிய விருதுகளை பெற்ற பெருமைக்குரிய கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா தனது வலைதள பக்கத்தில் நானா படேகர் மறைவு குறித்து ஈவில் டெட் என்று குறிப்பிட்டுள்ளார். இது தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாபெரும் கலைஞராக மதிக்கப்படும் நானா படேகர் குறித்து நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்த இந்த பதிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை தனுஸ்ரீ தத்தா தமிழில் நடிகர் விஷால் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற படத்தில் நடித்திருக்கிறார். மீ டூ பாலியல் குற்றச்சாட்டுகளை சோசியல் மீடியா மூலமாக வெளிப்படுத்தும் முயற்சியை முதலில் ஆரம்பித்து வைத்தவர் இவர்தான். அப்படி அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆளானவர் மறைந்த நடிகர் நானா படேகர்தான்.

கடந்த 2009ம் ஆண்டில் ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற படத்தில் நடித்த போது நானா படேகர் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து போலீசிலும் புகார் அளித்தார். ஆனால் இந்த வழக்கை விசாரித்த போலீசார் நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா அளித்த குற்றச்சாட்டுகளுக்கு சரியான ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் இல்லை என்று கூறிவிட்டனர். அப்போது முதல் நானா படேகர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து தனுஸ்ரீ தத்தா பேசி வந்தார்.

இந்த சூழலில் தற்போது நடிகர் நானா படேகர் மறைந்த நிலையில் அவரது மறைவு குறித்து ஈவில் டெட் என்றும், தான் லக்னோவில் விரைவில் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சியின் கவனத்தை நானா படேகரின் மறைவு செய்தி திசை திருப்பி விடுமோ என்று கவலைப்படுவதாகவும் அவர் தனது பதிவில் கூறியிருந்தார். இதையடுத்து அனைத்திந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சுரேஷ் சியாம்லால் குப்தா, நடிகை தனுஸ்ரீ தத்தாவை கடுமையாக சாடியுள்ளார்.

திரைப்பட உலகமே ஒரு ஜாம்பவானின் இழப்பை நினைத்து வேதனைப்பட்டு கொண்டிருக்கும் இந்த வேளையில், தனுஸ்ரீ தத்தாவின் செயல் ஒரு மலிவான விளம்பரமாகும். பொதுவாக ஒருவரது மறைவிற்குப் பிறகு இதுபோன்ற பொறுப்பற்ற அறிக்கையை யாரும் வெளியிட்டது இல்லை .நீங்கள்தான் முதல் நபர். நீங்களே கடைசி நபராக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் கடுமையாக நடிகை தனுஸ்ரீ தத்தாவை விமர்சித்து இருக்கிறார்.

சற்று முன்