தமிழ் சினிமாவில் நல்ல நடிகர் என பெயர் வாங்கியவர் நடிகர் சரவணன். அவர் நடிக்க வந்த ஆரம்பத்தில் நடிகர் விஜயகாந்த் போல இருக்கிறார் என்று பலரும் சொன்னதுண்டு. ஆனால் கேப்டனும் சரவணனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நடிப்பு உடல்வாகு என எல்லாவற்றிலும் சரவணன் தனிப்பட்ட கலைஞராக தான் தன்னை வெளிப்படுத்தினார்.
ஆரம்பத்தில் சில படங்களில் ஹீரோவாக நடித்த சரவணன், பிறகு பட வாய்ப்பகளின்றி இருந்தார். அமீர் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டில் வெளிவந்த பருத்திவீரன் படத்தில் நடிகர் கார்த்தி அறிமுகமானார். இதில் கார்த்திக்கு சித்தப்பா கேரக்டரில் சரவணன் நடிப்பு பெரிய அளவில் பாராட்டை பெற்றது.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நடிகர் சரவணன், வில்லன் கேரக்டர்களிலும் அதிகமாக நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக கலந்துக்கொண்டார். ஆனால் அவரது ஒழுங்கீனமான செயல் ஒன்றை பற்றி அவரே சொல்லிய நிலையில் திடீரென பிக்பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் சரவணன் கூறியதாவது, ஒரே வாரத்தில் 11 படங்களில் நடிக்க நான் கமிட்டானேன் என்று சொன்னால் நீங்கள் நம்புவீங்களா. ஆனால் நான் 11 படங்களில் நடிக்க கமிட் ஆனேன். ஒரே வாரத்தில் 11 படங்களுக்கு என்னுடைய அண்ணனும் பிஆர்ஓவும் சேர்ந்து அட்வான்ஸ் வாங்கி இருக்காங்க. அது எனக்கு தெரியவே தெரியாது.
அவங்க ரெண்டு பேரும் தான் கதையை கேட்டாங்க. என்னோட விஷயங்களை பார்த்துப்பாங்க. அடுத்த வருஷத்துக்கு வரைக்கும் முன்பணம் வாங்கி வச்சிருப்பாங்க. நான் எந்த படத்துக்கு ஷூட்டிங் போறேன், என்ன கதை எந்த ஊருக்கு போறேன் எதுவுமே எனக்கு தெரியாது. ஒரு ஆறு வருடங்கள் அப்படி இருந்தேன்.
அப்ப எங்க வீட்ல வந்து பாத்தீங்கன்னா 10 பேர் தூங்கிட்டு இருப்பாங்க 10 பேர் சாப்பிட்டு இருப்பாங்க அவங்க எல்லாம் யாருன்னே எனக்கு தெரியாது இவனுங்க சொன்னா தான் எனக்கே தெரியும் என்று நடிகர் சரவணன் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இப்போது நடிகர் சரவணன் நடித்த சட்டமும் நீதியும் என்ற வெப் சீரிஸ் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளிவந்து அதிக கவனம் பெற்றிருக்கிறது.





