- Advertisement -
Homeபொழுதுபோக்குராஜ்யசபா எம்பி ஆக களத்தில் இறங்கும் மக்கள் நீதிமய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் - பார்லிமென்டில்...

ராஜ்யசபா எம்பி ஆக களத்தில் இறங்கும் மக்கள் நீதிமய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் – பார்லிமென்டில் தீப்பொறி பறக்குமா? ஏகப்பட்ட ஹோம் ஒர்க் செய்த விண்வெளி நாயகன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகர் கமல்ஹாசன் வருகிற 25ம் தேதி டெல்லி பார்லிமென்டுக்குள் ராஜ்யசபா எம்பி ஆக நுழைகிறார். மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்த 2018ம் ஆண்டில் நடிகர் கமல்ஹாசன் துவங்கினார். ஆரம்பத்தில் திமுகவை எதிர்த்து அரசியல் பேசினார். ஆனால் ஒரு கட்டத்தில் அரசியலில் போதிய ஆதரவின்றி திமுகவுக்கே விசுவாசியாக மாறும் நிலைக்கு ஆளானார்.

திரையில் பல ஜாலங்களை நிகழ்த்தி காட்டி ஒரு நடிகராக ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்ற கமல்ஹாசன், அரசியல் களத்தில் பெரியதாக எதையும் சாதிக்க முடியவில்லை. தொடர்ந்து தேர்தல்களத்தில் போராடிய அவர் ஒரு கட்டத்தில் கடைசிக்கு ஒரு ராஜ்ய சபா எம்பி ஆவது ஆகி விடுவோம் என்ற முடிவில் திமுக ஆதரவில் இப்போது ராஜ்யசபா எம்பி ஆகிறார். வரும் 25ம் தேதி அவர் எம்பியாக பதவியேற்கிறார்.

இந்நிலையில் மற்ற ராஜ்யசபா எம்பிகளை போல இல்லாமல், தமிழகத்தில் குரலாக அவர் ஒலிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக கடந்த 15 தினங்களாக அவர் பயங்கரமாக ஹோம் ஒர்க் செய்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. அதாவது பார்லிமென்டில் பல்வேறு விஷயங்களை தமிழகம் சார்பில் பேச அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக தமிழ் சினிமாவின் இன்றைய நிலை அடுத்த கட்ட நகர்வுக்கு தேவையான மத்திய அரசின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் விவசாயம் கல்வித்துறை தொழில்துறை சார்ந்த பல்வேறு பிரச்னைகள் என பார்லிமென்டில் பலதரப்பட்ட பிரச்னைகளையும் கமல்ஹாசன் பேசுவதற்காக திட்டமிட்டுள்ள அதுகுறித்த முழு தகவல்களையும் திரட்டி கைவசம் வைத்திருக்கிறார்.

அதாவது கேஸ்கட்டை கையில் எடுத்துக்கொண்டு கோர்ட்டுக்கு செல்லும் ஒரு வக்கீலை போல, ராஜ்யசபா எம்பியாக ஏகப்பட்ட தகவல் திரட்டுகளுடன் நடிகர் கமல்ஹாசன் பார்லிமென்டுக்குள் செல்ல இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் பிரச்னைகளை தொடர்ந்து பேசி அதற்கான தீர்வுகளை எப்படியும் நான் பெற்றுத் தருவேன் என்றும் நடிகர் கமல்ஹாசன் தனக்கு நெருக்கமானவர்களிடம் சூளுரைத்து வருகிறார்.

ஆனால் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக உள்ள ராகுல் காந்தியை பேசவே அனுமதிக்க மறுக்கிறார்கள். இதில் இண்டியா கூட்டணியை சேர்ந்த நடிகர் கமல்ஹாசனை முதலில் பேச அனுமதிப்பார்களா என்பதே சந்தேகமாக உள்ளது என்று பலரும் விமர்சிக்க துவங்கி உள்ளனர். எப்படி இருப்பினும் என் குரலை பார்லிமென்டில் ஒலிக்க செய்வதே என் லட்சியம் என்று கமல்ஹாசன் உறுதியாக கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்